புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

சத்யராஜ், சரத்குமார் உட்பட எட்டு பேர் மீதான பிடிவாரன்ட்டுக்கு உயர்நீதிமன்றம் தடை!
செவ்வாய் 13 ஜூன் 2017 16:30:16

img

பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில், நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உள்ளிட்ட எட்டு பேருக்கு நீலகிரி நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரன்ட்டுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. சென்னையில், 2009ஆம் ஆண்டு நடிகர் சங்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில், நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், சூர்யா, விவேக், விஜயகுமார், சேரன், அருண் விஜய், நடிகை ஶ்ரீபிரியா ஆகியோர் பத்திரிகையாளர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் ஆஜராகாததால் நீலகிரி குற்றவியல் நீதிமன்றம், எட்டுப் பேருக் கும் பிணையில் வர முடியாத அளவில் பிடிவாரன்ட் பிறப்பித்தது. பிடிவாரன்ட்டை ரத்துசெய்யக்கோரி, எட்டு பேரும் நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுக்களைத் தள்ளுபடிசெய்த நீதிபதி, பிடி வாரன்ட்டை உறுதிசெய்தது. மேலும், ஜூன் 17 ஆம் தேதிக்குள் எட்டு பேரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தர விட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர்கள் சார்பில் மனுத்தாக்கல்செய்யப்பட்டது. இந்த மனு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது , 'நீலகிரி நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த பிடிவாரன்ட்டுக்குத் தடை விதித் ததோடு, மறு உத்தரவு வரும் வரை வழக்கை விசாரிக்கக் கூடாது' என்று கூறி வழக்கு விசாரணையை இரண்டு வாரத்துக்கு ஒத்திவைத்தது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img