திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

மலேசிய வீரரின் நீச்சல் சாதனை
திங்கள் 12 ஜூன் 2017 18:15:42

img

கோலாலம்பூர், மொனாக்கோ, மோன்டோ கார்லோ அனைத்துலக நீச்சல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்று மலேசிய நீச்சல் வீரர் வில்சன் சிம் சாதனைப் படைத் தார். 400 மீட்டர் பிரி ஸ்டைல் நீச்சல் போட்டியில் தங்கம் வென்றதோடு மலேசிய தேசிய சாதனையையும் அவர் முறியடித்தார். இந்தப் போட்டியில் ஒலிம்பிக் தங்கப் பதக்க வீரரான ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மாக் ஹோர்ட்டனை வென்று மலேசியாவுக்கு தங்கத்தை வென்றெடுத்த மலேசிய வீரர் வில்சன் சிம்மிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.இந்தப் போட்டியில் ஒலிம்பிக் வீரர் மாக் வெள்ளிப் பதக்கத்தையும் சீனாவைச் சேர்ந்த வீரர் வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர். மொனாக்கோ போட்டியில் தங்கம் வென்று, புதிய தேசிய சாதனையை உருவாக்கி இருப்பதோடு ஒலிம்பிக் தங்க வீரரையும் வென்று இருப்பது ஓர் இனி மையான வெற்றி என்று தம்முடைய டுவிட்டர் செய்தியில் பிரதமர் கூறியுள்ளார்.

பின்செல்

விளையாட்டுச் செய்திகள்

img
தாய்லாந்து மாஸ்டர் ஓட்டப்போட்டியில் 15 தங்கப்பதக்கங்கள் வெல்ல மலேசியா இலக்கு.

24ஆவது அனைத்துலகப் போட்டியில் 15

மேலும்
img
வரலாறு படைத்தார் பி.வி.சிந்து. உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண்.

இந்திய வீராங்கனை பி.வி.சிந்து

மேலும்
img
சுக்மா திடல் தடப் போட்டியில் பூவசந்தன், கீர்த்தனா சாதனை.

பூவசந்தன் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியிலும்

மேலும்
img
சீலாட்டில் மேலும் இரு வெள்ளிப் பதக்கங்கள்.

தேசிய வீரர் முகமட் பௌசி காலிட்

மேலும்
img
மலேசிய ஜோடிக்கு வெண்கல பதக்கம்.

நீச்சல் போட்டியில் மலேசியாவை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img