வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

மஸ்ஜிட் இந்தியா பகுதியில் நிலைமை மோசமானால் இராணுவம் அழைக்கப்படும்
ஞாயிறு 11 ஜூன் 2017 11:37:37

img

கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள ரமலான் மாத அங்காடிக் கடைகளை குண்டர்தன போக்குடைய வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர். கோலா லம்பூர் மாநகர் மன்றம் இப்போது இவ்விவகாரத்தை கையாண்டு வருகிறது. நிலைமை மோசமானால் இராணுவம் அழைக்கப்படலாம் என்று கூட்டரசுப் பிரதேச, அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் எச்சரித்தார். ஜாலான் மஸ்ஜிட் இந்தியா பகுதியில் உள்ள அங்காடிக் கடைகளை குண்டர்தனமாக செயல்படும் வியாபாரிகள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். இவ் விவகாரம் தொடர்பில் கோலாலம்பூர் மாநகர் மன்றம் போலீசில் புகார் செய்துள்ளது. இந்த வியாபாரிகளில் பெரும்பாலோர் வெளியார். சிலாங்கூர் மாநி லத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எல்லாம் விரைவாக வெளியேற வேண்டும். புனித ரமலான் மாதத்தின்போது இப்பகு தியின் நிலை சீராகவும் கட்டொ ழுங்குடன் காணப்பட வேண்டும். இந்த வர்த்தகப் பகுதி கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேச வாசிகளுக்கு உரிய ஒன்று. நாங்கள் பரிசோதனை செய்ததில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந் தவர்கள் பெரும்பான்மையினர் இப்பகுதியினை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்.அநேக விரும்பத்தகாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தகராறுகளும் வன் முறைகளும் நடந்துள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறைக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது என்று செய்தியாளர்களிடம் அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெரிவித்தார். வர்த்தகர்கள் லைசென்சை பெற தக்க வழிமுறையினை கையாள வேண்டும். வர்த்தகர் களுக்கு தேவையான வர்த்தக இடங்களை வழங்குவதற்கு சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ முகமது அஸ்மி ஆவன செய்ய வேண்டும் என்று அமைச்சர் அறைகூவல் விடுத் தார்.இவர்களின் பிரச்சினையை நான் நன்கறிவேன். ஆனால், கோலாலம்பூர் கூட்டரசுப் பிர தேச மக்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களை இவர்களுக்கு நான் தாரைவார்த்து விட இயலாது. பிரச்சினையை சீக்கிரமாக சிலாங்கூர் மந்திரிபுசார் அஸ்மின் அலியிடம் கொண்டு செல்லுங் கள். அவர்தான் இதற்கு தீர்வு காண வேண்டும். மீண்டும் இவ்விவகாரம் தலைதூக்காதபடி பார்த்துக் கொள்வதற்கு தான் எந்தவொரு அதிகார ஏஜென்சியுடன் ஒத்து ழைக்க தயார் என்றார் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான். அநேக நிகழ்வுகள் நிகழ்ந் துள்ளன. கலவரம் மூண்டது, நிலைமை அசிங்கமாக காட்சி யளித்தது. பாதிக்கப்பட்ட பகுதி யினை நான் பார் வையிடுவேன்; கண்காணிப்பேன். வர்த்தகப் பகுதியின் ஆக்கிரமிப்பாளர்கள் குண்டர்கள் போல் நடந்து கொள்ள வேண்டாம் என்று அமைச்சர் அட்னான் அறிவுறுத்தினார். கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள் தற்போது நிலைமையினை கண்காணித்து வருகின்றனர். நிலைமை கட்டுமீறு மானால் ரேலா, சிவில் தற்காப் புத் துறை அல்லது ராணுவத்தின் உதவி நாடப்படும் என்று அமைச்சர் அதிரடியாக தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img