வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

போராட்டம் தற்காலிக வாபஸ்- முதல்வர் பழனிசாமியை சந்தித்தபின் அய்யாக்கண்ணு அறிவிப்பு!
சனி 10 ஜூன் 2017 15:13:53

img

விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். டெல்லி ஜந்தர் மந்தரைத் தொடர்ந்து சென்னையில் போராட்டத்தைத் தொடங்கினர் தமிழக விவசாயிகள். வறட்சி நிவாரணம், விவசாய கடன் தள்ளுபடி, காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க ஒருங் கிணைப்பாளர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் 41 நாள் போராட்டம் நடத்தப்பட்டது. முதல்வர் பழனிசாமி, விவசாயிகளை சந் தித்து பேசி போராட்டத்தை வாபஸ் பெற வைத்தார். ஆனால் முதல்வர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் சென்னையில் போராட்டத்தை தொடங்கி உள்ளனர் விவசாயிகள். இந்நிலையில் இன்று முதல்வரை சந்தித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அய்யாக்கண்ணு, ’கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தொகை ஒரு மாதத்தில் வழங்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்.மேலும் இரண்டு மாதத்துக்குள் முதல்வர் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என் றால் போராட்டம் தொடரும்’ என்று கூறினார். போராட்டத்தை அவர்கள் தற்காலிக வாபஸ் பெற்றுள்ளனர்!

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img