வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

தீவிரவாதிகளுக்கெல்லாம் அனுமதி, சமூக போராட்டவாதிக்கு தடையா?
சனி 10 ஜூன் 2017 15:01:00

img

ஜோர்ஜ்டவுன், எனது மகளின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ள தமிழகத்திலிருந்து புறப்பட்டு வந்த, எனது அருமை நண்பர் வைகோ-வை, விசா அளித்துவிட்டு, நாட்டுக்குள் நுழைய விடாமல், தடை விதித்து, திருப்பி அனுப்பும் மலேசிய அரசாங்கத்தின் முடிவை நான் கடுமையாக கண்டிக்கிறேன் என்று பேரா சிரியர் இராமசாமி கூறினார். பினாங்கில் நடைபெறவிருக்கும் தமது மகளின் திருமண வரவேற்புக்கு வருகை புரிந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ-வை, விசா அனுமதி அளித்தும், நாட்டிற்குள் நுழைய விடாமல், திருப்பியனுப்பும் மலேசிய அரசாங்கத்தின் முடிவை, பேராசிரியர் இராமசாமி கடுமையாக கண்டித்தார். இந்நாட்டிற்குள், யார், யாரோ வருகிறார்கள்; சில நேரங்களில் தீவிரவாதிகள் கூட நாட்டுக்குள் நுழைகிறார்கள், அவர்களையெல்லாம் தடுக்காத மலேசிய அரசாங்கம், ஒரு சமூக போராட்டவாதியான, வைகோவை தடுப்பது, எந்த விதத்திலும் ஏற்றுக் கொள்ள முடியாதது என்று அவர் கூறினார். இந்தியாவின் மூத்த அரசியல்வாதி, ஒரு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரை மலேசிய குடிநுழைவுத்துறை இவ்வாறு நடத்தியதை கடுமையாக கண்டித்த அவர், ஒரு திருமண அழைப்பில், வைகோ பங்கேற்றால், நாட்டில் என்ன பாதுகாப்பு அச்சுறுத்தல் நிகழ்ந்து விடப்போகிறது என்றும் கேள்வி யெழுப்பினார். வைகோவின் மலேசிய பயணம் முற்றிலும், தனிப்பட்ட வருகையாகும்; அதில் எந்த அரசியலும் இல்லை; அதற்கு ஏன் மலேசிய அரசு தடைவித்தது என்பது, புரியாத புதிராக உள்ளது. இந்த தடைக்குப் பின்னால், யார் இருக்கிறார்கள் என்ற சந்தேகம் எழுவதாக பேராசிரியர் இராமசாமி தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img