செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

லிட்டல் இந்தியாவை விட்டுச் செல்வது காலத்தின் கட்டாயம்.
சனி 10 ஜூன் 2017 13:56:12

img

பிரிக்பீல்ட்ஸ், பிரிக்பீல்ட்ஸ் லிட் டல் இந்தியாவிற்கும் இந்திய வியாபாரிகளுக்கும் இடையிலான உறவு மிகவும் ஆழமானது. ஆனால், கடந்த 30 ஆண்டுகளாக இங் குள்ள ஜாலான் டிரவர் ஸில் செயல்பட்டு வந்த ஸ்ரீ கோத்தா சூப்பர் மார்க்கெட் மே 31ஆம் தேதியோடு வியாபாரத்தை நிறுத்திக் கொண்டது, பிரிக் பீல்ட்ஸ் லிட்டல் இந் தியா ‘இன்னொரு வளர்ச்சியை’ நோக்கிச் செல்வதை வெளிப் படுத்துவதாகக் கூறப் படுகிறது. ஸ்ரீ கோத்தா சூப்பர் மார்க்கெட் வியாபாரத்தை நிறுத்திக்கொண்டதற்கு, இன்றைய காலக் கட்டத்தில் துரித வளர்ச்சியைக் கண்டு வரும் பிரிக்பீல்ட்ஸில் கடைகளுக்கான வாடகைகள் பெரிதும் உயர்த்தப்பட்டுள்ளதும் காரணம் என அங்குள்ள வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் வியாபாரம் குறைந்து வரும் தருணத்தில் வாடகை உயர்ந்து கொண்டிருப்பதைச் சமாளிக்க இயலாத வியாபாரிகள், பிரிக்பீல்ட்ஸ் லிட்டல் இந்தியாவை விட்டுச் சென்று வேறு இடங்களில் வியாபாரத்தைத் தொடங்குவதைக் காலத்தின் கட்டாயமாகத்தான் கொள்ள வேண்டும். வாடகை ஒப்பந்தம் காலாவதியாகும் வேளையில் வாடகைத் தொகை உயர்த்தப்படுவது சகஜமாக நடக்கும் விஷயம்தான். ஆனால், இதுதான் இப்போது இங்குள்ள வியாபாரிகள் வேறு இடங்களுக்கு மாறிச்செல்ல காரணமாகவும் உள்ளது என இங்குள்ள வியாபாரிகளில் ஒருவர் தெரிவித்தார். நிலை மையைச் சமாளிக்க இவர்களில் இன்னும் சிலர் வாடகைக்கு எடுத்த கடைகளில் குறிப்பிட்ட பகுதியைப் பிறருக்கு வாடகைக்கு விடவும் தொடங்கி உள்ளதாக அங்கு அழகியல் மையத்தை நடத்தி வரும் மீரா நாயர் குறிப்பிட்டார். வாடகை ஒப்பந்தம் காலாவதியாகும் வரையில் இவர் மாதத்திற்கு வெ.2,500ஐ செலுத்தி வந்துள்ளார். காலாவதியான பிறகு வாடகை தொகை வெ.3,000ஆக உயர்த்தப்பட்டது. இதனைச் சமாளிக்க கடையின் ஓர் அறையை வெ.500க்கு வாடகைக்குக் கொடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். கடந்த சில ஆண்டுகளில் பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் ஏற்பட்டு வரும் மாற்றம் அதி துரிதமாக உள்ளது. பல கடைகள் நடத்தப்படுகின்றன; பிறகு மூடப் படுகின்றன. இதற்கு வாடகை உயர்வும் காரணம். அந்த வகையில், ஸ்ரீ கோத்தா மூடப்பட்டதும் காலத்தின் கட்டாயம் எனக் குறிப்பிடுகிறார், அங்குள்ள கிரேஸ்சென்ட் கோர்ட்டில் வசிக்கும் ஜீவா. வாடகை உயர்வா அல்லது காலத்தின் கோலமா? துரித வளர்ச்சி கண்டு வரத் தொடங்கிய காலத்திலிருந்தே பிரிக்பீல்ட்ஸ் பகுதியில் வாடகை உயர்த்தப்பட்டு வருகிறது. வாடகை ஒப்பந்தம் காலாவ தியாகும் வேளையில் வாடகை உயர்த்தப்படும் நிலையில் பெரும்பான்மையான வியாபாரிகள் இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்படுகின்றனர் என சரவணா ஸ்டோரின் உரிமையாளர் பெரியண்ணன் பழனி தெரிவித்தார். இங்கு வியாபாரம் செய்யத் தொடங்கிய 10 ஆண்டுகளில் அவருக்கு வாடகை கொடுத்தவர் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வாடகையை உயர்த்துகிறார். அவருடைய கடையின் கீழ்தளத்திற்கு மட்டும் மாதந்தோறும் வெ.18,000ஐ வாடகையாகச் செலுத்தப்படுகிறது. அதே போன்று அங்குள்ள யுஎம் ஸ்டோர்ஸ், 5 மாடி கட்டடத்திற்கு மாதந்தோறும் வெ.100,000ஐ வாடகையாகச் செலுத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. தங்கும் விடுதிகள் மையமாகும் போக்கு பிரிக்பீல்ட்ஸ் இன்னொரு கோணத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்கு வாடகை உயர்வு காரணம் என்பதை மறுத்துள்ளார், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் மாநில இந்திய வர்த்தகச் சபையின் தலைவர் டத்தோ டாக்டர் வி.சண்முகநாதன். ஏனென்றால், இது வழக்கமாக நடக்கும் விஷயம். வாடகைக்ப்கு எடுத்துக் கொடுப்பவர்களும் வாடகைக்குக் கொள்பவர்களும் இணைந்து செயல்பட்டு வாடகைத் தொகையை ஒரு கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார். வாடகை உயர்விற்கு அப்பாற்பட்ட நிலையில் தற்போது இந்தப் பகுதியில் தங்கும் விடுதிகள் மையமாகும் போக்கு நிலவி வருகிறது. கடந்த 5 ஆண் டுகளில் மட்டும் 10 பட்ஜெட் தங்கும் விடுதிகள் (2 நட்சத்திர) இங்கு கட்டப்பட்டுள்ளதோடு இன்னும் பல கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்தத் தங்கும் மையமாகும் போக்கு இப்போது பிரிக்பீல்ட்ஸில் மட்டுமில்லை, கோலாலம்பூரில் உள்ள பெரும்பான்மையான பகுதிகளில் ஏற்பட்டு வருகிறது. பிரிக்பீல்ட்ஸில் போதுமான தங்கும் விடுதிகள் இருக்கின்ற போதிலும் இன்னும் மேன்மேலும் பல தங்கும் விடுதிகள் கட்டப்பட்டு வருவதால், இப்போது தங்கும் விடுதிகளை நடத்தி வருபவர்களின் வியாபாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாக இங்குத் தங்கும் விடுதியை நடத்தி வருபவருமான அவர் குறிப்பிட்டார். இங்குள்ள தங்கும் விடுதிகளின் உரிமையாளர்களின் வியாபாரமும் தக்க வைக்கப்பட வேண்டுமென்றால் பிரிக்பீல்ட்ஸின் ‘இன்னொரு வளர்ச்சியை’ நோக்கிய பயணத்தில் அதன் பாரம்பரியமும் அங்கு நடைபெறும் வியாபாரங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img