செவ்வாய் 25, செப்டம்பர் 2018  
img
img

தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கைது! மு.க.ஸ்டாலின் ஆவேசம்
வெள்ளி 09 ஜூன் 2017 16:50:37

img

புதுக்கோட்டையில் 3 தி.மு.க எம்எல்ஏ-க்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஜூன் 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதுக்கோட்டையில் ரூ.232 கோடி செலவில் கட்டப்பட்ட, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டடத் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழா வில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தம்பிதுரை, அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த அரசு விழாவுக்கு, புதுக் கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் பெரியண்ணன் அரசு, ரகுபதி, சிவமெய்யநாதன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந் ததாகக் கூறப்பட்டது. விழாவுக்கான விளம்பரங்களிலும் இவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தன. இதனிடையே விழாவுக்கு புறப்பட்டவர்களை 'விழாவில் பங்கேற்க வேண்டாம்' என காவல்துறையினர் தடுத்தனர். இதையடுத்து காவல் துறையினரை மீறி விழாவுக்கு புறப்பட்ட 3 எம்.எல்.ஏக்களும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தி.மு.க எம்.எல்.ஏக்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்துள்ள அக் கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ஜூன் 11 ஆம் தேதி புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
`தி.மு.க தூக்கி எறிந்துவிட்டது; தேசிய அரசியலில் களமிறங்குகிறேன்!’ - டி.ராஜேந்தர்

லட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன

மேலும்
img
`நம்ம பிரதமர் மோடிக்கு நோபல் பரிசு கிடைக்கணும்; உதவி பண்ணுங்க' - மக்களிடம் கோரும் தமிழிசை

`ஆயுஷ்மான் பாரத்' என்ற புதிய திட்டத்தை

மேலும்
img
`இரண்டாம் நம்பர் பிசினஸ்; கலப்பட கருப்பட்டி!' - கருணாஸை முடக்கும் எடப்பாடி பழனிசாமி

சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் முக்குலத்தோர்

மேலும்
img
ரஃபேல் விவகாரம் ...ஃப்ரான்ஸ் செல்ல இருக்கும் நிர்மலா சீதாராமன்

ஆளும் பாஜகவுக்கு இது பெரும் நெறுக்கடியை

மேலும்
img
"அவர் பேசுனது தப்புதான்; ஆனா, அரசை விமர்சிக்க உரிமையில்லையா?!" கிரேஸ் கருணாஸ்

அமைச்சர் உள்ளிட்டோரின் சப்போர்ட் கிடைக்காததால்,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img