ஞாயிறு 17, பிப்ரவரி 2019  
img
img

பிளாஸ்டிக் கலந்த அரிசி.
வெள்ளி 09 ஜூன் 2017 16:03:36

img

சீனாவிலிருந்து தருவிக்கப்படுவதாக நம்பப்படும், செயற்கை முறையில் தயாரிக்கப்படும் செயற்கை அரிசி முட்டை போன்ற உணவுப் பொருட்கள் நம் நாட்டு பேரங்காடிகளிலும் மளிகைக் கடைகளிலும் ஊடுருவியிருக்கிறதா என்பது குறித்து பல பயனீட்டாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கோதுமை, அரிசித் தவிடு குறுணையுடன் ஒரு சில வேதியப் பொருட்களை கலந்து பிளாஸ்டிக் அரிசி என்று நம்பப்படும் செயற்கை அரிசியையும் செயற்கை முட்டைகளையும் தயாரிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்தியா, தென் கிழக்காசியா போன்ற நாடுகளில் இத்தகைய செயற்கை அரிசி, முட்டைகள் அடையாளம் காணப்பட்டதாகவும் ஏற்கெனவே கூறப்பட்டுள்ளது. பேரங்காடியில் வாங்கி வந்து சமைத்த அரிசியில் பிளாஸ்டிக் கலந்திருப்பது கண்டு கூலாய், பண்டார் புத்ராவைச் சேர்ந்த எல்.பாஸ்கரன் (வயது 61) அதிர்ச்சியடைந்தார். கடந்த மே 30 ஆம் தேதி பேரங்காடியிலிருந்து வாங்கி வந்த அரிசியை இரு தினங்களுக்கு முன் கஞ்சியாக ஆக்கி குடித்த போது உணவில் வித்தியாசம் தெரிந்ததும் அதனை பொருட்படுத்தவில்லை எனக்குறிப்பிட்ட எல்.பாஸ்கரன், நேற்று முன்தினம் அதனை சோறாக சமைத்து சாப் பிட்ட போது சாப்பிடுவதில் கடுமை தெரிந்ததை உணர்ந்ததாக குறிப்பிட்டார். சோற்றை கையில் உருண்டையாக பிடித்த போது அது இறுகிக் கொண்டதாக குறிப்பிட்ட அவர் சுவரை நோக்கி வீசி எறிந்த போது அது சிதறாமல் எகிறி வந்ததாகவும் குறிப்பிட்டார். பின்னர் வாங்கிய அரிசியை நன்றாக கவனித்த போது அதில் பிளாஸ்டிக் கலந்திருப்பதை தான் உணர்ந்ததாக குறிப்பிட்ட எல்.பாஸ்கரன் இது தொடர்பில் விசாரணை செய்யும்படி போலீசில் புகார் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். போலீசாரின் ஆலோசனையின் அடிப்படையில் இன்று உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் இலாகாவிலும் சென்று புகார் செய்ய விருப்பதாக குறிப்பிட்ட எல்.பாஸ்கரன் இதன் தொடர்பில் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பர் என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார். இந்த விவகாரம் குறித்து சுகாதார அமைச்சும் உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் நலத்துறை கூட்டுறவுக்கழக அமைச்சும் பேரங்காடிகள் ஹைபர் மார்க்கெட்டுகளில் ஆராய வேண்டும். உணவுப் பொருட்களை போலியாகத் தயாரிக்கக் கூடாது. கலப்படம் செய்யக்கூடாது என்று கடுமையான சட்ட விதிகள் நம் நாட்டில் உள்ளன. அப்படி யிருக்கும் போது இந்த போலியான பிளாஸ்டிக் அரிசி குறித்து உடனடியாக நடவடிக்கையெடுக்க வேண்டும். அது உண்மையாகயிருப்பின் அத்தகைய போலிப் பொருட்களை இறக்குமதி செய்பவர்கள் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று பயனீட்டாளர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை 

முறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்

மேலும்
img
அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும் 

மாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img