வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

குடியரசுத் தலைவர் தேர்தல் தேதி இன்று மாலை அறிவிப்பு?
புதன் 07 ஜூன் 2017 15:47:32

img

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில், இன்று மாலை குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான தேதி அறி விக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையத்திலிருந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் ஆணையத் தலைவர் நஜிம் ஜைதி, குடியரசுத் தலைவர் தேர்தல் தேதியை அறிவிப்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் குடியரசுத் தலைவர் தேர்தலுக்குத் தயாராகிவருகின்றன. ஆளும் பாரதிய ஜனதா கட்சி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளருக்கு எதிராக, சக்தி வாய்ந்த பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் முடிவெடுத்துள்ளன. இதுதொடர்பாக காங்கிரஸ், தி.மு.க, ஐக்கிய ஜனதா தளம், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு முடிவு செய்துள்ளன. இருப்பினும், பா.ஜ.க இந்த முறை தனியாகவே வேட்பாளரை நிறுத்தும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றிருக்கும் என்றே கருதப்படுகிறது. இந்தியாவின் பெரிய மாநிலங்களான உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்டவற்றில் பா.ஜ.க ஆளும் கட்சியாக இருக்கும் நிலை யில், பா.ஜ.க அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்திலும் பெரும்பான்மை பலத்துடன் இருக்கிறது. அரசியல் கட்சிகள், குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு தீவிரமாகத் தயாராகிவருகின்றன. இந்த நிலையில், இன்று மாலை குடியரசுத் தலைவர் தேர்தலுக் கான தேதி அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து, தலைமைத் தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி அறிவிப்பு வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img