திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

அந்நியத் தொழிலாளர்களுக்கான இ-கார்ட் பதிவுக்கு கடைசி நாள் ஜூன் 30
புதன் 07 ஜூன் 2017 13:23:35

img

கோலாலம்பூர், தற்காலிக அமலாக்க அட்டை அல்லது இ-கார்ட் என்ற மின்னியல் அட்டையைப் பெற தங்களின் சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை உடனடியாக பதிவு செய்யும்படி முதலாளி களை கேட்டுக் கொண்ட குடி நுழைவுத்துறை தலைமை இயக்குநர் முஸ்தாபார் அலி தவறினால் கடுமையான அமலாக்க நடவடிக்கையை எதிர்நோக்க வேண்டும் என்று எச்சரித்தார். இந்த தொழிலாளர்களை பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதி முடிவடை வதாக அவர் கூறினார். இவ்வாண்டு பிப்ரவரி 15ஆம் தேதிக்கும் மே 31ஆம் தேதிக்கும் இடையே 97,469 மின்னியல் அட்டைகள் மட்டுமே விநியோகிக்கப்பட்டிருப்பதாக கூறிய முஸ்தாபார், 17,182 முத லாளிகள் மட்டுமே குடிநழைவுத் துறையிடம் அத்தியாவசியமான விண்ணப்பங்களை சமர்ப்பித்து இருப்பதாக குறிப்பிட்டார். இந்த எண்ணிக்கை எதிர்பார்க்கப்பட்டதைவிட மிகக் குறைவு. நான்கு லட்சத்திற்கும் ஐந்து லட்சத்திற்கும் இடைப்பட்ட சட்டவிரோத அந்நியத் தொழி லாளர்கள் முறையான ஆவணங்களை கொண்டிருக்க வில்லை. அனுமதிக்கப்பட்டதை விட கூடுதல் நாட்கள் தங்கி இருக்கிறார்கள். வேலை வாய்ப்பு விதிமுறைகளை மீறி உள்ளனர் என்பன போன்ற பிரச்சினைகள் இருப்பது எங்களுக்கு தெரியும். இவர்கள் குடிநுழைவுத் துறை அலுவலகங்களுக்கு வரவேண்டும் என்றார் அவர். நான் முதலாளிகளை எச்சரிக் கிறேன். குடிநுழைவுத் துறை போதிய கால அவகாசம் வழங்கி விட்டது. பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப் பட மாட்டாது என்று அவர் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.ஜூலை முதல் தேதியில் இருந்து, மின்னியல் அட்டை வைத்திராத அந்நியத் தொழி லாளர்களை குடிநுழைவுத் துறை அதிகாரிகள் தேடிச் செல்வர் என்று கூறிய முஸ்தாபார், இந்த தொழிலாளர்களை பதிவு செய்ய தவறிய முதலாளிகளுக்கு எதிராக அதிகாரிகள் கடுமையான நட வடிக்கை எடுப்பர் என்று எச்சரித்தார். இதற்காக குடிநுழைவுத் துறையில் ஒரு குழு அமைக்கப் பட்டிருப்பதாக அவர் கூறினார். அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் நிறுவனங்களை நாங்கள் கண் காணித்து சோதனை நடவடிக்கை களை மேற்கொள்வோம். சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களை வேலையில் அமர்த்தி மலேசியர்களைவிட அவர்களுக்கு குறைவான சம்பளம் வழங்கும் போக்கு முத லாளிகளிடையே நிலவுவதாக அவர் தெரிவித்தார். இந்த மின்னியல் அட்டை அடுத்த ஆண்டு பிப்ரவரி 15 வரையில் செல்லுபடியாகும்.இவ்வாண்டு ஆரம்பத்தில் இருந்து ஜூன் முதல் தேதி வரையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின்போது 24,068 சட்டவிரோத குடியேற்றவாசிகள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டு இருப்பதாக முஸ்தாபார் கூறினார். இந்த காலக்கட்டத்தில் நாடு தழுவிய நிலையில் மேற்கொள் ளப்பட்ட 6,478 நடவடிக்கை களின்போது 566 முதலாளிகளும் 19,968 சட்டவிரோத அந்நியத் தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
img
அம்னோவை நாங்கள் வெளியேற்றுவோம். மசீச எச்சரிக்கை

மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ லியோவ் தி

மேலும்
img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img