புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

முதலமைச்சர் பழனிசாமி ஆட்சிக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்க கூடாது
செவ்வாய் 06 ஜூன் 2017 21:02:46

img

சென்னை, எடப்பாடி பழனிசாமிக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு அளித்து வருகிறார்கள். இதில் 11 பேர் டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவதுடன் எடப் பாடி பழனிசாமி அரசுக்கு மறைமுகமாக மிரட்டல் விடுத்து வருகிறார்கள்.11 பேரும் திடீரென்று போர்க்கொடி உயர்த்தி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடு படுவார்களோ என்ற அச்சமும் எடப்பாடி பழனிசாமி அணியினருக்கு ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும், டி.டி.வி.தினகரன் அணியினருக்கும் இடையேயான மோதல் முற்றியது. அமைச்சர் ஜெயக்குமார் அறிவிப்பை எதிர்த்தும், தினகரனுக்கு ஆதரவாகவும், வெற்றிவேல், தங்க தமிழ்ச் செல்வன் உள்ளிட்ட ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் குரல்கொடுத்தனர்.தினகரனை நீக்க இவர்களுக்கு அதிகாரம் இல்லாத நிலையில் அவர்களுக்கு அந்த அதிகாரத்தை கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால் அ.தி. மு.க.வில் கட்சியிலும், ஆட்சியிலும் மீண்டும் நெருக்கடி உருவாகியுள்ளது. இன்று காலை டி.டி.வி.தினகரனை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் எம்.எல்.ஏ.க்கள் தூசி மோகன் (செய்யாறு), பன்னீர்செல்வம் (கலசப்பாக்கம்), பாப்புலர் முத்தையா (பரமக்குடி), ராஜன் செல்லப்பா (மதுரை வடக்கு) ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். தொடர்ந்து முன்னாள் அமைச் சரும் எம்.எல்.ஏவுமான செந்தில் பாலாஜியும் தினகரனை சந்தித்தார். இதுவரை தினகரனுக்கு 23 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.இன்று மட்டும் 12 எம்.எல்.ஏக்கள் தினகரனை சந்தித்து உள்ளனர். தொடர்ந்து மேலும் பல எம்.எல்..ஏக்கள் சந்திப்பார்கள் எனகூறப்படுகிறது.தினகரன் தன்னை சந்தித்த எம்.எல்.ஏக்களிடம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான ஆட்சிக்கு எவ்வித நெருக்கடியும் கொடுக்க கூடாது என தினகரன் வலியுறுத்தி உள்ளார். எம்.எல்.ஏக்கள் ஆதரவு குறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:- தினகரனுக்கு இன்னும் எம்.எல்.ஏக்களின் ஆதரவு அதிகரிக்கும்.எதன் அடிப்படையில் ஜெயக்குமார் அறிக்கை விடுகிறார்? சிலரை அடையாளம் காட்டவே இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். தினகரன் ஆதரவாளர் வி.பி கலைராஜன் கூறியதாவது:- தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து டிடிவி தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார். தினகரனை ஒதுக்கிவைக்கும் அதிகாரம் பொது செய லாளருக்கு மட்டுமே உள்ளது.ஆட்சி கவிழாது.29 எம்.எல்.ஏக்கள் தினகரனுக்கு ஆதரவாக உள்ளனர். முதல்-அமைச்சர் ஆலோசனை கூட்டத்திலும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்வார்கள் இவ்வாறு ஆவர் கூறினார். தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள எம்.எல்.ஏக்கள் வருமாறு:- கம்பம்- ஜக்கையன் நிலக்கோட்டை -தங்கதுரை ஆண்டிபட்டி -தங்க தமிழ் செல்வன் பெரம்பூர் -வெற்றிவேல் செய்யாறு-தூசி மோகன் கலசப்பாக்கம்-பன்னீர்செல்வம் பாப்புலர் முத்தையா -பாப்புலர் முத்தையா மதுரை வடக்கு-ராஜன் செல்லப்பா கரூர் - செந்தில் பாலாஜி பெருந்துறை-தோப்பு வெங்கடாசலம் விளாத்திகுளம் - உமா மகேஸ்வரி அரூர்- முருகன் சோழிங்க நல்லூர் -பார்த்தீபன் பண்ட்ருட்டி-சத்யா பன்னீர் செல்வம் ஓட்டப்பிடராம சுந்தரராஜன் மானாமதுரை- மாரியப்பன் கென்னடி பெரியகுளம்-கதிர்காமு பரமக்குடி முத்தையா பூந்தமல்லி-ஏழுமலை ராதாபுரம்-இன்பதுரை

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img