புதன் 14, நவம்பர் 2018  
img
img

ஜெயலலிதா விட்டுச் சென்ற ஒரே சோத்து ரூ. 5 லட்சம் கோடி கடன்தான்
செவ்வாய் 06 ஜூன் 2017 20:45:35

img

திருவாடானை முதல்வராக இருந்த ஜெயலலிதா இந்த மாநிலத்திற்கு விட்டுச் சென்ற ஒரே சோத்து ரூ. 5 லட்சம் கோடி கடன்தான் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கி ணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் திரு வாடானையில் நடந்த கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக் கூட்டத்தில் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது அதி முகவை கடுமையாக விமர்சித்துப் பேசினார். ஜெயலலிதா தமிழகத்திற்கு வெறும் கடனைத்தான் விட்டுச் சென்றுள்ளார் என்று அவர் சாடினார். தமிழனை ஆட்சி செய்ய வையுங்கள் ஒட்டு மொத்த தமிழர்களும் சேர்ந்து ஒரு தமிழனை ஆட்சி செய்ய வைக்கமுடியும். யார் வேண்டுமானாலும் இந்த நிலத்தில் வாழலாம். ஆனால் இந்த நிலத்தை தமிழன் தான் ஆள முடியும். அரசியல் படியுங்கள் தமிழகத்தில் தனிமனித அபிமானிகளை ஒழிக்க வேண்டும். தமிழக இளைஞர்கள் அரசியல் படிக்க வேண்டும். கடந்த எட்டு ஆண்டுகளாக கத்தினேன். ஆனால் பணம் வாங்கிக்கொண்டு தான் தமிழக மக்கள் ஓட்டுப் போட்டீர்கள். அரசியல் என்பது வாழ்வியல். அரசியல் வேண்டாம் என நீங்கள் விலகி நின்றால் நாம் யாரை வெறுக்கிறோமோ அவர் தலைமையிலான ஆட்சியின்கீழ் தான் வாழவேண்டி வரும். வளமெல்லாம் அழிகிறது. நம் வளங்களை அழித்து வருவதை பற்றி யாரும் கவலைப்படவில்லை. அரசு போக்குவரத்து துறையில் ரூ.44,000 கோடி கடன். மின் துறையில் பல ஆயிரம் கோடி நஷ் டம். மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா தமிழகத் தில் ரூ.5 லட்சம் கோடி கடன் சுமையை விட்டு சென்றுள்ளார். மிகப்பெரிய கனவுகளோடு நாம் தமிழர் கட்சி தமிழக மக்களுக்காக போராடி வருகிறது. நாம் தமிழரின் கனவு நாம் தமிழர் கட்சியின் தத்துவங்களை வைத்து ஒருநாள் ஆட்சியை நடத் துவார்கள். தமிழனும் தமிழும் 50,000 ஆண்டுகளுக்கு மூத்தவர் கள் என உலக அறிஞர்களும், நம் முன்னோர்களும் சோல்லி சென் றுள்ளனர். தமிழ்நாட்டை சாதி யால் ஆளமுடியாது என்றார் சீமான்

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img