சனி 16, பிப்ரவரி 2019  
img
img

லண்டன் தாக்குதல். 12 பேர் கைது. ஐஎஸ் பொறுப்பேற்பு!
திங்கள் 05 ஜூன் 2017 14:16:05

img

லண்டன் நகரின் மையப்பகுதியில் உள்ள லண்டன் பாலத்தில், நேற்று முன்தினம் வாகனத்தை வேகமாக ஓட்டிவந்த மர்ம நபர்கள், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்தவர்கள் மீது மோதினர். அந்த மர்ம நபர்கள், இதே போன்று மூன்று முறை பாதசாரிகள் மீது வேனை மோதி விபத்து ஏற்படுத்தியுள் ளனர். அதுமட்டுமன்றி, கத்தியால் பலரைத் தாக்கியுள்ளனர். அவர்கள் ஏற்படுத்திய இந்த விபத்தில், சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த 30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளனர். ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த லண்டன் போலீஸ், தாக்குதல் நடத்திய மூன்று நபர்களைச் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்பட்டது. இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். தற்போதுவரை, இந்தச் சம்பவம் தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந் நிலையில், உயிரிழந்தவர்களில் இரண்டு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, கனடா மற்றும் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளைச் சேர்ந்த இருவர் காயமடைந்துள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
பூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி

விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

மேலும்
img
நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 5 பேர் பலி 

கிழக்கு பகுதியில் செயல்பட்டு வந்த நிலக்கரி

மேலும்
img
மின் சிகரெட் வெடித்து ஆடவர் பலி 

சிகிச்சை பெற்று வந்த பிரவுனுக்கு திடீர் பக்கவாதம்

மேலும்
img
ஐ.எஸ் பயங்கரவாதிகள்  தோற்கடிக்கப்படுவார்கள் 

கடந்த டிசம்பர் மாதம் சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள்

மேலும்
img
இந்தோனேசிய குடியுரிமை அதிகாரியை  அறைந்த  பெண்ணுக்கு சிறை 

தங்கி இருந்ததற்காக 3,500 அமெரிக்க டாலர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img