திங்கள் 18, பிப்ரவரி 2019  
img
img

‘பன்னீர்செல்வம்தான் போட்டியாளர்; தினகரன் அல்ல!’
திங்கள் 05 ஜூன் 2017 14:06:23

img

பெங்களூரு சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை இன்று நேரில் சந்தித்துப் பேச இருக்கிறார் டி.டி.வி.தினகரன். ‘திகார் சிறையில் இருந்து தினகரன் வந்ததும் அவரை சில எம்.எல்.ஏக்கள் நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இதுகுறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எந்தக் கவலையும் அடைய வில்லை. தினகரனுக்கு எதிரான நடவடிக்கைகளை நிதானமாகவே மேற்கொள்ள இருக்கிறார்' என்கின்றனர் கொங்கு மண்டல எம்.எல்.ஏக்கள். இரட்டை இலைச் சின்னத்தைப் பெறுவதற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் 25-ம் தேதி டி.டி.வி.தினகரனைக் கைது செய்தது டெல்லி போலீஸ். இந்த வழக்கில் முன்ஜாமீன் பெற்று கடந்த வாரம் சென்னை வந்தார் தினகரன். இதையடுத்து, ஆளும்கட்சி எம்.எல்.ஏக்களும் அ.தி.மு.க நிர் வாகிகளும் அவரை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர். ' அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்புக்கு மட்டுமல்ல, முதலமைச்சராகவும் தின கரன் பதவியேற்க வேண்டும் எனத் தொண்டர்கள் விரும்புகிறார்கள்' என அதிரவைத்தார் அ.தி.மு.கவின் நட்சத்திர பேச்சாளர் நாஞ்சில் சம்பத். நேற்று தினகரன் ஆதரவாளர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலும், 'ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி, வீரமணி உள்ளிட்ட நான்கு அமைச்சர் கள் உங்களுக்கு எதிராகக் கடுமையாகப் பேசியுள்ளனர். இவர்களை அமைச்சர் பதவியில் இருந்தே அகற்ற வேண்டும்' எனவும் கோரிக்கை வைத்தனர். “அ.தி.மு.கவின் இரண்டு அணிகளும் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தையைத் தொடங்க இருந்த நேரத்தில், ‘கட்சியின் எதிர்காலத்துக்காக நான் ஒதுங்கிக் கொள்கிறேன்' எனப் பேட்டியளித்தார் தினகரன். இப்போது, ‘மீண்டும் கட்சிப் பணிகளில் ஈடுபட இருக்கிறேன்’ என அவர் கூறுவதை அ.தி.மு.கவின் பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் விரும்பவில்லை. இதனால் ஆட்சிக்குள் தேவையற்ற குழப்பம்தான் ஏற்பட்டுள்ளது. தினகரனின் கட்சிப் பணி குறித்து முடி வெடுக்க வேண்டிய இடத்தில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். நேற்று செங்கோட்டையன் பேசும்போதும், ‘முதல்வர் முடிவெடுப்பார்' என உறுதியாகக் கூறிவிட்டார். கொங்கு மண்டல அமைச்சர்களும் மௌனம் காக் கின்றனர். இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் எண்ணம் வேறு மாதிரியாக இருக்கிறது” என விவரித்த கொங்கு மண்டல அ.தி.மு.க பிரமுகர் ஒருவர், அ.தி.மு.க எம்.எல்.ஏக்களிடமும் கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் தினகரன் ஆலோசனை நடத்துவதை உன்னிப்பாக கவனித்து வருகிறார் எடப் பாடி பழனிசாமி. நேற்று முன்தினம் தன்னை சந்திக்க வந்த உளவுத்துறையின் முக்கிய அதிகாரி ஒருவரிடம் நீண்டநேரம் விவாதித்தார். அப்போது பேசிய முதல்வர், 'எங் களைப் பொறுத்தவரையில் பன்னீர்செல்வம்தான் போட்டியாளர். தினகரன் அல்ல. அவரால் என்னுடைய ஆட்சிக்கு எந்த இடையூறும் வரப் போவ தில்லை. என்னைப் பதவியில் இருந்து இறக்கிவிட்டு, இன்னொருவர் கையில் இந்த அதிகாரம் செல்வதற்கு வாய்ப்பில்லை. இதை எம்.எல்.ஏக்களும் உணர்ந்திருக்கிறார்கள். அவர்கள் யாரும் எனக்கு எதிராகச் செயல்படப் போவதில்லை. தற்போதுள்ள சூழலில், உடனடியாக தேர்தல் வருவதை தி.மு.க, காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் விரும்பவில்லை. சிறையில் இருந்து வெளியே வந்த தினகரனை ஏழெட்டு எம்.எல்.ஏக்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். இவர்கள் யாரும் தினகரனைத் தலைவராக ஏற்றுக் கொண்டவர்கள் அல்ல. தினகரனின் நெகட்டிவ் இமேஜ்தான் கட்சியின் பலவீனம் என்பதும் அவர்க ளுக்குத் தெரியும். இந்த எம்.எல்.ஏக்களில் ஒருவர்கூட, தினகரனை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்கப் போவதில்லை. ஆட்சி அதிகாரத்தில் தங்களுடைய முக்கியத்துவத்தை அதிகரித்துக் கொள்ளவே அவர்கள் தினகரனை சந்திக்கின்றனர். அவர்களை எப்படிக் கையாள்வது என்று எனக்குத் தெரியும். தினகரனை சந்திக்கும் அமைச்சர்களை நான் நீக்கினாலும், அவர்களால் என்ன செய்துவிட முடியும்? தண்ணீரில் இருந்து தரையில் விழுந்த மீன் போல துடிக்கத்தான் முடியும். தினகரனை நான் போட்டியாளராகக் கருதவில்லை. காலமும் சூழலும் அவரைக் கவனித்துக் கொள்ளும். அவருக்கு எதிரான எந்த நடவடிக்கையும் வேகப்படுத்த விரும்பவில்லை. வரக் கூடிய நாள்களில் நிதானமாகவே செயல்பட விரும்புகிறேன்' என மனம் திறந்து பேசியிருக்கிறார். கொங்கு மண்டல அமைச்சர்களையும் அமைதியாக இருக்கும்படி அவர் அறிவுறுத்தியிருக்கிறார்" என்றார் விரிவாக. “எடப்பாடி பழனிசாமி மௌனமாக இருப்பதற்குப் பின்னால், வேறு சில காரணங்களும் இருக்கின்றன. இரட்டை இலைக்கு விலை பேசிய வழக்கில், ஒரு கோடியே 80 லட்ச ரூபாய் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்த தகவலை வருமான வரித்துறைக்கும் அமலாக்கத்துறைக்கும் டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்த சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது சிறையில் இருந்து தினகரன் வெளியே வந்து விட்டதால், அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த உள்ளனர். இந்த வழக்கின்கீழ் தினகரன் மீண்டும் கைது செய்யப்பட வாய்ப் பிருக்கிறது. இதுதவிர, அவர் மீதான பெரா வழக்குகளின் தீர்ப்பும் நெருங்க இருக்கிறது. ஆட்சி மற்றும் கட்சி அதிகாரத்துக்குள் அவர் நெருங்க முயற்சித் தால், மத்திய அரசின் நடவடிக்கை கடுமையாக இருக்கும் என உறுதியாக நம்புகிறார் எடப்பாடி பழனிசாமி. எனவேதான், ‘காலமும் சூழலும் அவரைக் கவனித்துக் கொள்ளும்’ எனப் பேசி வருகிறார். இன்னொரு முறை கட்சியில் இருந்து அவரை நீக்கிவிட்டால், அரசியல் அதிகாரத்தில் இருந்து முழுமையாக ஒதுக்கி வைக்கப்பட்டுவிடுவார். அதற்கான சூழல்களை தினகரனே உருவாக்குவார் என்பதால்தான், மௌனத்தைக் கடைபிடித்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி" என்கிறார் அ.தி.மு.கவின் தலைமைக் கழக நிர்வாகி ஒருவர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img