வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

ஒருபோதும் விடமாட்டோம்..! தினகரனுக்கு எதிராக ஓபிஎஸ் ஆவேசம்
திங்கள் 05 ஜூன் 2017 14:00:01

img

டி.டி.வி.தினகரனுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தியும் புகார் அளித்துள்ளதாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியை கிளப்பியுள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்த பிறகு கட்சியை கைப்பற்ற போவது யார் என்ற அதிகாரப்போட்டி நிலவி வரும் சூழலில், ஜாமீனில் தினகரன் வெளியே வந்தபிறகு ஓ.பி.எஸ் அணியில் இருக்கும் எம்.பி மருதைராஜாவின் வீட்டு கிரகபிரவேசம் நிகழ்ச்சியில் தினகரனை பற்றி பேசி மேலும் சர்ச் சையை கிளப்பியிருக்கிறார் ஓ.பி.எஸ். அதுமட்டுமில்லாமல் பெரம்பலூருக்கு வரும்போது அ.தி.மு.க.வினர் சிலர் முற்றுகையிட போகிறார்கள் என்று காவல்துறைக்கு தகவல் வந்ததும் காவ லர்கள் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். சர்ச்சைகள் அதிகமாக இருந்த நிலையில் மருதைராஜாவின் வீட்டை திறந்து வைத்துவிட்டு பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "அ.தி.மு.க வழிநடத்தபோவது யார் என்பதை கட்சியிலுள்ள ஒன்றரைக்கோடி தொண்டர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர், ஜெயலலிதா இருவரும் 45 ஆண்டுகள் இந்த இயக்கத்தினை தொண்டர்கள் இயக்கமாகத்தான் வளர்த்தார்கள். இன் றைக்கு மாபெரும் தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கியிருக்கிறது. ஆனால் எந்த விதத்திலும் கட்சிக்காக உழைக்காத சிலர் அ.தி.மு.க என்ற மாபெரும் இயக்கத்தை அவர்களின் குடும்பத்தின் கட்டுபாட்டில் வைத்திருக்க முயலுகிறார்கள். இதை நாங்கள் ஒருபோதும் விடமாட்டோம். எங்களுடைய தர்மயுத்தத்தின் நோக்கமே தனிபட்ட குடும்பத்தினரின் ஆதிக்கத்தின் பிடி யில் இருக்கக்கூடாது என்பது தான். அதுமட்டுமில்லாமல், ஜெயலலிதாவின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அவரது இறப்பிலுள்ள மர்ம முடிச்சுகளை அவிழ்க்கபடவேண்டும். அதற்கு உரிய நீதி விசாரணை கமிஷன் அமைக்கப்படவேண்டும் என்று தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். அ.தி.மு.க பொதுச்செயலாளர் தேர்வு முறைகளை நடைமுறைப்படுத்தி தான், கழகத்தின் பொதுச்செயலாளரை தேர்வு செய்யவேண்டும் என்று கழக சட்ட வீதி கூறுகிறது. சசிகலாவை கழகத்தின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தே முதலில் தவறு என்கிறோம். அப்புறம் எப்படிதினகரனை துணை பொதுச் செயலாளராக நாங்கள் ஏற்றுக்கொள்ளமுடியும் சொல்லுங்கள். அவர் கட்சியின் பணியை தொடங்க போவதாக சொல்கிறார். இதற்கு நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம். அவர்களும் விசாரணை செய்துக்கொண்டிருக்கிறார்கள்" என்றார். இதைத் தொடர்ந்து, இரு கட்சிகளும் எப்போது இணையப்போகிறது என்ற கேள்விக்கு பதில் அளிக்க பன்னீர்செல்வம் மறுத்துவிட்டார். இரட்டை இலை யாருக்கு என்று கேட்டதும், ஒன்றரைகோடி தொண்டர்களின் ஆதரவு எங்களுக்குள்ளது. கண்டிப்பாக எங்களுக்கு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
img
திருவாரூர் தொகுதிக்கு யார் வேட்பாளர்?' - தினகரனின் `அனுதாப' சென்டிமென்ட்

ஆர்.கே.நகர் வெற்றியைத் தொடர்ந்து திருவாரூரிலும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img