வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

சீபீல்டு ஆலய நில விவகாரம் பொதுமக்கள் பிரச்சினையாக முன்னெடுக்கப்படும்.
திங்கள் 05 ஜூன் 2017 13:30:45

img

ஷா ஆலம் சர்சைக்குரிய யுஎஸ்ஜே முன்னாள் சீபீல்டு ஆலய நில விவகாரம் இனி ஆலய பராமரிப்புக் குழுவின் பிரச்சினையாக இல்லாமல் நில விவகாரத்திற்காக போராடக்கூடிய சிறப்பு பணிக்குழு முன்னெடுக் கும் நடவடிக்கையாக அமையும் என்று அப்பணிக் குழுவின் பொறுப்பாளர்கள் நேற்று தெரிவித்தனர். சீபீல்டு மகா மாரியம்மன் ஆலயத்தை அங்கேயே நிலை நிறுத்துவதற்கான மக்களின் குரலாக இந்த பணிக்குழு செயல்படும் என்று சிறப்பு பணிக்குழுவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் சமய அமைப்பு தலைவர் ராமாஜி கூறினார். ஆலயத் தொடர்பில் குறிப்பிட்ட எந்த தரப்பையும் சாராத ஆலயத்தை பாதுகாக்கும் ஒரே நோக்கத்தில் இப்பணிக் குழு செயல்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இதில் மக்கள் நலம் , சமய நலம் காக்கும் சுமார் 20 அரசு சாரா அமைப்புகளின் பிரதிநிதிகளும் சட்ட ஆலோசகர்களும் வழக்க றிஞர்களும் இணைந்துள்ளனர் என்று அவர் சொன்னார். நேற்று ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு கூட்டத்தில், ஆலய நில விவகாரம் தொடர்பாக சிறப்பு குழுவின் நடவடிக்கை என்ன என்பது பற்றி பத் திரிகை யாளர்களுக்கு அவரும் இதர பொறுப்பாளர்களும் விளக்கமளித் தனர். இக்கூட்டத்தில் பேசிய குழு பொறுப்பளர்களில் ஒருவரான ஹிண்ட்ராப் ரகு, 145 ஆண்டுகள் வரலாறு கொண்ட ஆலய விவகாரம் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கையை தள்ளி வைப்பத ற்கு மாநில மந்திரி புசாரிடம் பேச்சு வார்த்தை நடத்துவோம் என்றார். ஆலயத்தின் வரலாற்றை நிலை நிறுத்துவதற்கு கலாச்சார, சுற்றுப் பயணத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரியிடம் கொண்டு செல்லப்படும் என்றார். ஆலய பாதுகாப்புக்காக 48 நாட்களுக்கு 24 மணிநேர சிறப்பு பூஜை நடத்தப்படும் என்றும் அவர் சொன்னார். இதனிடையே கூட்டத்தில் பேசிய குழுவின் வழக்கறிஞர் பாலமுரளி நீதிமன்றத்தில் 3 மனுக்கள் முன் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நீதிமன்றம் வழங்கியுள்ள நீதிமன்ற ஆணையத்தை நிறுத்துவது, நடவடிக்கைக்கு எதிரான தடையுத்தரவு பெறுவது, நீதிமன்றம் முன்பு வழங்கிய புரிந்துணர்வு தீர்ப்பை மறுபரிசீலனை செய்வது ஆகிய மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ள தாக அவர் குறிப்பிட்டார். அதே நேரத்தில் ஆலய நில ஒப்படைப்பு ஆணை தொடர் பான கால அவகாசமும் அதற்காக தாங்கள் முன்வைத்த கோரிக்கைக்கு வெகு சீக்கிரத்தில் நீதி மன்ற பதிலையும் தாங்கள் எதிர்பார்ப்பதாக அவர் விவரித்தார். இக்குழுவின் நடவடிக்கைக்கு பலரும் எந்தவித அரசியல் பேதமில்லாமல் ஆலயத்தை பாதுகாக்க முன்வந்திருக்கும் பட்சத்தில் அவர்களை பாராபட்சமின்றி வரவேற்க வேண்டும் என்றும் பூச்சோங் முரளி கருத்துரைத்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img