வெள்ளி 22, பிப்ரவரி 2019  
img
img

அடுத்த பிரதமர் யார் என்ற சர்ச்சை எதிர்க் கட்சியை சாய்த்துவிடும்.
திங்கள் 05 ஜூன் 2017 13:15:52

img

பெட்டாலிங் ஜெயா, எதிர்க்கட்சி கூட்டணியை ஒன்றுபடுத்துவதை விடுத்து அடுத்த பிரதமர் யார் என்ற சர்ச் சையில் பக்காத்தான் ஹராப்பான் ஈடுபடுவது அடுத்த தேர்தலில் இது பாதகமாக முடியும். இவ்வாறு பார்ட்டி பிரிபூமி பெர்சத்து மலேசியாவின் வியூக அமைப்பாளர் ஒருவர் எச்சரித்துள்ளார். இதுபோன்ற சர்ச்சை எதிர்க் கட்சி கூட்டணியை அடுத்த பொதுத் தேர்தலில் சாய்த்து விடும். பிரதமர் டத்தோஸ்ரீ அன் வார்தான் என்று பக்காத்தான் ஹராப்பான் முரண்டு பிடிப்பது அது தனக்கு தானே குழிதோண்டிக் கொள்வதற்கு ஒப்பாகும் என்று பிரிபூமி கட்சியின் வியூக பிரிவின் தலைவர் டத்தோ டாக்டர் ராய்ஸ் உசேன் தெரி வித்தார். இந்த சோதனையான காலக்கட்டத்தில் எதிர்க்கட்சி ஒன்றுபட்டு கட்டொழுங்காக இருக்க வேண்டும். தேசிய முன்னணியை எவ்வாறு வீழ்த்துவது குறித்துத்தான் நமது சிந்தனை இருக்க வேண்டும். நமது இலக்கு எல்லாம் தேசிய முன்னணியை ஒட்டு மொத்தமாக தேர்தலில் வீழ்த்தி காட்டுவதுதான். ஆனால் நடப்பு விவகாரங்கள் எல்லாம் நேருக்கு மாறாக இருக்கிறது. டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் எதிர்நோக்கும் யதார்த்த நிலையினை நாம் சற்று யோசித்து பார்க்க வேண்டும். அவர்தான் அடுத்த பிரதமர் என்று விடாப்பிடியாக முன்மொழிவது அர்த்தபூர்வமாக இல்லை. இது விவேகமற்ற அணுகு முறையாகவும் விளங்குகிறது. மீண்டும் துன் டாக்டர் மகாதீர் பிரதமர் என்ற பிரிபூமி கட்சியின் ஆலோசனையை பக்காத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று டாக்டர் ராயிஸ் வலி யுறுத்தினார்.துன் மகாதீரை ஆதரிக்க பக்காத்தான் மறுக்கிறது என்றால் அது எதிர்க்கட்சியினர் மத்தியில் அபாயகரமான வேற்றுமையினை தோற்று வித்துவிடும் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.

அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்

மேலும்
img
தேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும்.  ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.  

தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல

மேலும்
img
காப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து

மேலும்
img
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும்  பி.எஸ்.எச் உதவித் தொகை.

இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.

மேலும்
img
மின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர். 

அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img