புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

இந்தியர்களுக்கான நீண்ட நாள் வீட்டுடைமை பிரச்சினைக்கு நீல பெருந்திட்டம் உதவும்
திங்கள் 05 ஜூன் 2017 12:20:18

img

கோலாலம்பூர் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களின் நீண்ட நாளைய வீட்டுடைமை பிரச்சினைக்கு தீர்வு காண மலேசிய இந்தியர்களுக்கான நீல பெருந்திட்டம் உத வும் என்று செடிக் நம்பிக்கை தெரிவித்துள்ளது. அவர்களின் மறுகுடியேற்றத்திற்கு உதவும் வகையில் சுமுகமான பேச்சுவார்த்தை உட்பட பல்வேறு நடவ டிக்கைகள் எடுக்கப்படும். ஒரு தெளிவான, உறுதியான வழிகாட்டிகளை உருவாக்குவதற்கு கொள்கை கட்டமைப்பும், ஒழுங்கு முறை திருத்தங்களும் செய்யப்படும் என்று செடிக் தலைமை இயக்குநர் பேராசிரியர் என்.எஸ். ராஜேந்திரன் கூறினார். தங்களின் புதிய சூழலுக்கு ஏற்ப இந்தியக் குடும்பங்கள் தங்களை அனுசரித்துக்கொள்வதற்கான ஆதரவுகளும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும். மலே சிய இந்திய சமூகத்தில் முன்னாள் தோட்டத் தொழிலாளர்களின் வீட்டுடைமைப் பிரச்சினையே மிகவும் முக்கியமான ஒன்றாக விளங்கி வருகின்றது. வீடமைப்பு அல்லது தொழிலியல் மேம்பாட்டிற்காக தோட்டங்கள் எடுத்துக்கொள்ளப்பட்ட போது ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் முறை யான மாற்று ஏற்பாடுகள் இன்றி வாழ்வில் சிரமங்களை எதிர்நோக்கினர். இன்னமும் அந்த நிலைமையில்தான் உள்ளனர். சி.ஜி.டி.என். தொலைக்காட்சி வெளிப்படுத்திய சிலாங்கூர், டெங்கில் தாமான் பெர்மாத்தா அடுக்ககத்தின் குடியிருப்பாளர்களை பொறுத்த வரையில், அவர்கள் பிராங் புசார், காலவேய் செஜிலி, மெடிங்கிலி தோட்டங்களின் முன்னாள் தொழிலாளர்கள் ஆவர். புத்ராஜெயா மேம்பாட்டினால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள். எனினும், அக்குடியிருப்பாளர்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்க 2013-இல் மத்திய அரசாங்கம் முன் வந்தது. சிப்பாங், அம்பார் தினாங்கில் சிலாங் கூர் அரசாங்கம் வழங்கும் ஒரு நிலத்தில் 400 வீடுகளை நிர்மாணிக்க வெ.6 கோடி இதன் வழி அங்கீகரிக்கப்பட்டது. நில விவகாரத்தில் மத்திய அர சாங்கம் பல்வேறு சவால்களை எதிர்நோக்கிய போதிலும், அவ்வீடமைப்புத் திட்டத்தை அமலாக்கம் செய்ய தகுதியான ஒரு குத்தகையாளரை அடையாளம் காண்பதற்கு இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நகர்ப்புற நல்வாழ்வுத் துறை அமைச்சினால் இறுதியாக டெண்டர் விடுக்கப் பட்டது. இந்த வீடமைப்புத் திட்டம் துரிதமாக அமலாக்கம் காணப்படுவதை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட அமைச்சின் அதிகாரிகளுடன் செடிக் அதிகா ரிகள் இணைந்து செயல்படுவர் என்று ராஜேந்திரன் விளக்கம் அளித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நியத் தொழிலாளர்களுக்கான வெ.10,000 லெவி கட்டணத்தை முதலாளிகளே  செலுத்த வேண்டும்

திறன்மிக்க அந்நியத் தொழிலாளர்களுக்கான

மேலும்
img
ஊழல் பேர்வழிகள் தண்டிக்கப்பட வேண்டும். ஆயுள் தண்டனை தேவையில்லை.

எவ்வளவு காலம் சிறையில் அடைக்கப்பட வேண்டும்

மேலும்
img
போர்ட்டிக்சன்  இடைத்தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கும்.

அத்தொகுதி காலியாக்கப்பட்ட விதம் ஜனநாயகக்

மேலும்
img
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஓராண்டு லெவி கட்டணம் வெ.10,000.

அரசாங்கத்திற்கு சேர வேண்டிய நிதி ஆதாயங்களில்

மேலும்
img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img