வியாழன் 18, ஏப்ரல் 2019  
img
img

சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால் ஆத்திரம்: 36 பேரை சுட்டுக்கொன்ற நபர்
ஞாயிறு 04 ஜூன் 2017 16:17:09

img

பிலிப்பைன்ஸ் நாட்டில் சூதாட்ட மையத்தில் 36 பேரை கொன்றுவிட்டு நபர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் தற்போது வெளியாகி யுள்ளது. பிலிப்பைன்ஸ் தலைநகரான மனிலாவில் உள்ள Resorts World Casino என்ற சூதாட்ட மையம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த மையத்தில் நபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தி ஹொட்டலுக்கு தீ வைத்ததில் 36 பேர் கொல்லப்பட்டனர்.இச்சம்பவத்திற்கு பின்னர் தாக்குதல் நடத் திய நபரும் தனக்கு தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்டு தற்கொலை செய்துள்ளார்.இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் நடத்திய விசாரணையில் தாக்குதல் நடத்திய நபரின் பெயர் Jessie Javier Carlos எனத் தெரிய வந்தது. மேலும், இவர் பிலிப்பைன்ஸ் குடிமகன் எனவும் தீவிரவாதி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.சூதாட்டத்திற்கு அடிமை ஆனதால் கணக்கில்லா பணத்தை இழந்து கடனாளி ஆகியுள்ளார். கடன் தொல்லை தாங்க முடியாமல் அவதியுற்று வந்துள்ளார். இதுபோன்ற ஒரு மனநிலையில் தான் அவர் சூதாட்ட மையத்தில் தாக்குதல் நடத்தியதாக விசாரணை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
வடகொரியாவில் அடுத்த வாரம்  புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு?

அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்

மேலும்
img
உலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு  சீனா வெற்றிகர சோதனை!

8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்

மேலும்
img
மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது

இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்

மேலும்
img
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை

அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை

மேலும்
img
அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி

சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img