செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

தந்தையை காப்பாற்ற கண்ணீருடன் கோரிக்கை விடுத்த 3 பிள்ளைகள்
ஞாயிறு 04 ஜூன் 2017 16:10:21

img

சவுதி அரேபியா சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்களது தந்தையை காப்பாற்ற உதவுமாறு அவருடைய 3 பிள்ளைகள் கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவிற்கு கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.சவுதி அரேபியா மத குருக்களை விமர்சனம் செய்த குற்றத்திற்காக Raif Badawi என்பவர் கடந்த 2012-ம் ஆண்டு யூன் 17-ம் திகதி கைது செய்யப்பட்டார். இவரது குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 1,000 கசையடிகளையும் தண்டனையாக நீதிமன்றம் அளித்துள்ளது. இவர் கனடா குடிமகன் இல்லையென்றாலும், இவரது மனைவியும் 3 பிள்ளைகளும் தற்போது கியூபெக் மாகாணத்தில் உள்ள Sherbrooke நகரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், தங்களது தந்தையை விடுதலை செய்ய உதவுமாறு 3 பிள்ளைகளும் கனடா பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டியின் இணையத்தளத்தில் இவர்களது வீடியோ வெளிடப்பட்டுள்ளது. இதில், ‘தந்தையை பார்த்து 5 ஆண்டுகள் ஆகிறது. இனி மேலும் மெளனம் காக்க வேண்டாம். தயவு செய்து சவுதி அரேபியா மன்னரை தொடர்புக்கொண்டு எங்களது தந்தையை விடுதலை செய்ய உதவ வேண் டும்’ என மூவரும் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர். இவ்விவகாரத்தில் கனடா பிரதமர் அமைதியாக இருப்பதற்கு அம்னாஸ்ட்டியும் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. எனினும், இதுவரை கனடா பிரத மர் இவ்விவகாரத்தில் முடிவு எடுக்கவில்லை.வரும் யூன் 17-ம் திகதி பதாவி கைது செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைவதால் மாண்டீரியல் நகரில் நிகழ்ச்சி ஒன்றிற்கு அம்னாஸ்ட்டி ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
பாலஸ்தீன உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள் 

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்

மேலும்
img
70 வயது முதியவரை திருமணம் செய்த இளம்பெண்  முதலிரவில் நகைகளுடன் ஓட்டம் 

பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா

மேலும்
img
கர்ப்பப்பையில் இருந்து கருக்குழந்தையை வெளியே எடுத்து அறுவை சிகிச்சை 

இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு

மேலும்
img
அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம் - டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை 

பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்

மேலும்
img
பூமியில் வேற்று கிரகவாசிகள் விமானம்- விஞ்ஞானிகள் உறுதி

விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img