செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

காலணிகளில் சீக்கியர்களின் சமய சின்னம்
ஞாயிறு 04 ஜூன் 2017 14:51:22

img

ஈப்போ சீக்கியர்களின் சமய சின்னம் பதிக்கப்பட்ட காலணிகள் கடைகளில் விற்பனை செய்யப்படுவதை உள்நாட்டு வாணிபம் கூட்டுறவு அமைச்சு உடனடியாக மீட்க வேண்டும் என்று கோரி கெராக் சீக் எனும் இயக்கம் நேற்று மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் செய்தது. இயக்கத்தின் செயலாளர் டத்தோ அமர் ஜிட் சிங் கில் போலீஸ் புகார் செய்ததோடு சம்பந்தப்பட்ட காலணி (சிலிப்பர்) தயாரிப்பு நிறுவனத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரினார். சமய நல்லிணக்கத்திற்கு புறம்பாக சிலர் செயல்படுகின்றனர். மற்ற சமயங்களின் சின்னங்கள் பதிக்கப்பட்ட காலணிகள், உடைகள் தயாரிக்கப்பட்டு விற் பனை செய்யப்பட்டது. இதற்கு கடுமையான நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் இப்போது இந்நிலை தொடர்கிறது. சீக்கியர்களின் சமய சின்னங்கள் பதிக்கப்பட்ட காலணிகள் பற்றிய தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டது கண்டு அதிர்ச்சிக்குள்ளானதாக கூறினார். சீக்கிய சமூகம் இதனை வன்மையாக கண்டிக்கிறது என்றுக் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நேர்முகத் தேர்வில் தோல்வி கண்டுள்ள 10 ஆசிரியர்களின் எதிர்காலம் கேள்விக்கிடம்

அவர்களின் இந்நிலையைக் கண்டு பெற்றோர்கள்

மேலும்
img
டாக்டர் மகாதீருக்கு எதிராக சதியா? இதெல்லாம் பாஸின் திட்டமிட்ட பொய்

இம்மாதிரியான கூற்றுகள் பொய்யானவை

மேலும்
img
காட்சிப்பொருளாகவே கிடக்கும் சங்லூன் தமிழ்ப்பள்ளி

சங்லூன் தமிழ்ப்பள்ளியும் இடம்பெ ற்றுள்ளது

மேலும்
img
வழங்கப்பட்ட வாக்குறுதிகள் வெற்று வாக்குறுதிகளா?

பதில் சொல்லுமா நம்பிக்கைக் கூட்டணி.

மேலும்
img
மக்கள் உடனடியாக மாற்றங்களைக் காண விரும்புகிறார்கள்.

எங்களுக்கு கால அவகாசம் தேவை.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img