வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

அன்று என்னைக் கிண்டலும் கேலியும் செய்தவர்கள் இன்று...
ஞாயிறு 04 ஜூன் 2017 12:20:04

img

பள்ளியில் சக மாணவர்களாலும், அண்டை வீட்டினராலும் தினமும் கேலிக்கும் கிண்டலுக் கும் இலக்காகி, சோர்ந்து போய் கிடந்த ஒரு ‘குண்டுப் பையன்’ தான் அகிலன் தாணி.செந்தூலில் பிறந்து வளர்ந்த அகிலன் தாணி ஒரு சீனப் படத்தைப் பார்த்து, அதில் வரும் சண்டைக் காட்சிகளால் ஈர்க்கப்பட்டு, பின் னாளில் அத்தகைய தற்காப்புக் கலையில் பயிற்சி பெற்று புகழின் உச்சத்திற்கு சிறகு விரித்திருக்கிறார். மலேசியாவில் நடந்த பல எம்எம்ஏ போட்டி களில் அகிலன் தாணி பங்கேற்றார். இங்கி ருந்துதான் அவரின் இரண்டாவது கட்ட பயணம் தொடங் கியது.சிங்கப்பூரை மையமாக கொண்டு செயல்படும் எம்எம்ஏ அமைப்பின் ஏற்பாட்டி லான ஒன் ஃபைட் போட்டிகளில் பங்கேற்ற அதே வேளையில் அமெ ரிக்கா, தாய் லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் தொடர்ந்து பயிற் சிகளையும் அவர் பெற்று வந்தார். இதுவரை அகிலன் 7 வெற்றிகளை நிலைநாட்டியுள்ளார். இதில் மூன்று நாக்-அவுட் வெற்றிகளாக அமைந்தது. எம்எம்ஏ (Mixed Martial Arts) எனப்படும் கலப்பு தற்காப்புக் கலைப் போட்டியில் மலேசியா வின் முன்னணி வீரராக உரு வெடுத்திருந்த அகிலன் தாணி சிங்கப்பூரில் நடந்த அனைத்து லக ஒன் ஃபைட் (ONE Fighting Championship) கலப்பு தற்காப் புக் கலைப் போட்டியில் வால்டர் வெய்ட் பிரிவில் சாம்பியன் பட்டத்திற்காக களமிறங்கினார். மே 26 ஆம் தேதி யன்று சிங்கப்பூர் அரங்கில் நடை பெற்ற போட்டியில் அமெரிக்க வீரர் பென் அஸ்க்ரென்னை எதிர்த்து கம்பிக் கூண்டு களத்திற்குள் இறங்கினார்.நடப்புச் சாம்பிய னான அமெரிக்கா வைச் சேர்ந்த பென் அஸ்க் ரென் 15 முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார்.இருந்த போதிலும் அவரின் கடுமையான சவால்களை எதிர் கொள்ள முடியாததால் அகிலன் தாணி வெற்றியை பறி கொடுத்தார். இப்போட்டியில் அவர் தோல்வி கண்டிருந்தாலும் ஒட்டுமொத்த மலேசியர்களின் மனதிலும் அகிலன் தாணி இடம் பிடித்துள்ளார்.கலப்பு தற்காப்புக் கலைப் போட்டியில் மேலும் பல நுட் பங்களை கற்றுக் கொள்வதற்காக அகிலன் தாணி விரைவில் அமெரிக் காவிற்கு பயணமாகவுள்ளார்.அதே வேளையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறும் போட்டியிலும் அவர் களமிறங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு தனித்து வாழும் தந்தையாக இருந்து, நாட்டின் பிரபலமான ஒரு விளையாட் டாளரை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார் கோலாலம்பூர், செந்தூலைச் சேர்ந்த தணிகாசலம்.நாட்டின் இன்றைய பரபரப்பான, பிரபலமான விளையாட்டாளராகத் திகழும் அகிலன் தாணியின் தந்தை தான் இந்த தணிகாசலம். அண்மையில் மலேசிய நண்பனுக்கு வருகை புரிந்த அகிலனுடன் நடத்தப்பட்ட ஒரு நேர்காணலின்போது தன் தந்தையை பற்றி சுவாரஸ்யமான விஷ யங்களை அவர் பகிர்ந்து கொண்டார். நண்பன் வாசகர்களுக்காக இதோ அவர் சொன்ன விவரங்கள்: நான் பிறந்த கைக்குழந்தையாக இருந்த போதே என் அம்மா என்னை கைவிட்டுச் சென்று விட்டார். இது என் அப்பா எனக்குச் சொன்னது. என் அம்மா யார் என்பதும், அவரின் பெயரும் எனக்கு தெரியாது.எனக்கு எல்லாமே என் அப்பாதான். எனக்கு ஆசான், வழிகாட்டி, ஆலோச கர் எல்லாமே அவர்தான். நான் பள்ளிக் கூடம் படிக்கும்போது பள்ளியில் பகடி வதைக்கு (bully) ஆளான ஒரு மாணவன் நான். நான் அவ்வளவு குண்டாக இருந்தேன். எனது 16 வயதில் எனது எடை 140 கிலோ. எருமை, சோத்து மாடு, பன்றி என்றுதான் நண்பர்கள் அழைப்பார்கள். அப்போதெல்லாம் மற்றவர்கள் என்னை கேலி செய்வதைப் பற்றி நான் கவலைப்பட்டதில்லை. என் தந்தை எப்போதும் எனக்கு உறுதுணையாக இருந்தார். நண்பர்கள் என்னை அதிக மாக நையாண்டி செய்யச் செய்ய என்னை நான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறி என்னுள் இருந் தது. (அகிலனின் எடை இப்போது 88 கிலோ). இதனால் கராத்தே கற்றுக்கொண்டேன். பிரச்சினை தீர்ந்ததா? அதுதான் இல்லை. என்னை இன்னும் அதிகமாக என் நண்பர்கள் கேலி செய்யத் தொடங்கி னார்கள். ஒரு நாள் தொலைக்காட்சி யில் ஃபிளெஷ் பாய்ன்ட் (Flash Point) என்ற ஒரு சீனப் படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் வந்த ஒரு காட் சியில் கலப்பு தற்காப்புக் கலை பயன்படுத்தப்பட் டது. அது எனக்கு வியப்பாக இருந் தது. அதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் பிறந்தது. பிறகு அக்கலையைப் பற்றி படித்து, இணையத்தளம் வழி ஆராய்ந்து, அது பிரேசிலியன் ஜியு ஜிட்சு (Brazilian Jiu Jitsu) என்பதை தெரிந்து கொண் டேன். எனது 16-ஆவது வயதில் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ஒரு மையத்தில் பிரேசிலியன் ஜியு ஜிட்சு கலையை கற்றுக்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிட்டி யது. ஆனால், அதற்கான விலை அதிகமாக இருந்த தால் என் அப்பாவால் தொடர்ந்து என்னை பயிற்சிக்கு அனுப்ப முடியவில்லை. ஆனால், 17-ஆவது வயதில் மீண் டும் என்னை பயிற்சிக்கு அனுப்பும் வாய்ப்பை என் அப்பா ஏற்படுத்தித் தந்தார். கோலாலம்பூரில் உள்ள மொனார்கி எம். எம்.ஏ பயிற்சி மையத்தில் ஐந்து மாதங்கள் பயிற்சியை மேற்கொண்டேன். எஸ்.பி.எம் தேர்வை எழுத வேண்டியிருந்ததால் இடையே ஒரு ‘சின்ன பிரேக்’. தேர்வு முடிந்ததும், ஒரு மாதம் மட் டுமே என் அப்பா என்னை பயிற்சிக்கு அனுப்பி வைக்க முடிந்தது. அந்த அளவிற்கு கட்டணம் அதிகமாக இருந்தது. எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்பது அவரின் ஆலோசனை. எனவே, ‘‘உனக்கு இரண்டு ஆண் டுகள் அவகாசம் கொடுக்கிறேன். உன்னால் முடிந்ததை செய்துகொள்’ என்று அவர் கூறிவிட்டார். முதல் ஈராண் டுகளுக்கு ஓர் உடற்பயிற்சி மையத்தில் துப்புரவாளராக வேலை செய்தேன். அடுத்து, ஓராண்டுக்குப் பிறகு, கலப்பு தற்காப்பு கலையில் பயிற்சியை தொடங்கினேன். அதிலி ருந்து எனது எடையைக் குறைத்து மேலும் என்னை மேம்படுத்திக்கொள் ளும் காரியத்தில் இறங்கினேன். அதற் கடுத்த ஆண்டில் கலப்பு தற்காப்பு கலையில் மலேசிய சாம்பியன் ஆனேன். இந்த இரண்டு ஆண்டு களாக இக்கலையில் நிபுணத்துவம் பெறும் அளவிற்கு பயிற்சியை மேற்கொண்டு வருகிறேன். நான் இன்னும் செந்தூலை சுற்றிக்கொண்டுதான் இருக்கிறேன். ஒரே ஒரு மாற்றம் என்னவெனில் இப்போது என்னை யாரும் பகடிவதை செய்வதில்லை. எல்லோரும் என்னு டன் புகைப்படம் எடுத்துக்கொள்ளவே விரும்புகின்றனர். ஆனால், அது எதையும் மாற்றவில்லை என்கிறார் அகிலன்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img