செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

வளர்ப்பு மகளின் பெற்றொரைத் தேடும் கிருஷ்ணன் தம்பதிகள்
சனி 03 ஜூன் 2017 18:43:13

img

தஞ்சோங் மாலிம் கடந்த 2005இல் மூன்று மாதக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு தங்களிடம் ஒப்படைத்துவிட்டுச் சென்ற சீனப் பெற்றோரை கிருஷ்ணன் - பிச்சை தம்பதிகள் தேடி வருகின்றனர். இங்குள்ள ஜாலான் பேரோப் குடியிருப்புப் பகுதியில் வசித்து வரும் கிருஷ்ணன், மூன்று மாதக் குழந்தையை ஒப்படைத்த சீனர் ஒருவர், தனது மனைவி மன நோயாளியாக இருப்பதால், நீங்கள்தான் எனது குழந்தையை வளர்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார். குழந்தையை ஒப்படைத்து விட்டுச் சென்றவர் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியும் இன்றுவரை தனது குழந்தையை வந்து பார்க்க வில்லை என்றார். போ லீ எனப் பெயர் கொண்ட அக்குழந்தைக்கு இன்று பன்னிரண்டு வயதாகியும் எந்தவொரு ஆவணமும் இல்லாத காரணத்தால் அடையாள அட்டை எடுக்க முடியாத சூழ்நிலையை எதிர்நோக்கியுள்ளார் என தெரிவித்தார். சீனச் சிறுமியின் பெற்றொர்களைப் பற்றிய தகவல் ஏதும் தெரிந்தால், 0172352982 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கிருஷ்ணன் கேட்டுக் கொள்கிறார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
img
கடுமையான மழை, வெள்ளம் மார்ச் மாதம் வரை நீடிக்கும்.

பொது மக்களுக்கு எச்சரிக்கை.

மேலும்
img
பி40 பிரிவைச் சேர்ந்தவர்கள் பெட்ரோல் வாங்குவதற்கு சலுகை விலை அட்டை.

உதவித் தொகையின் அடிப்படையில் ரோன் 95

மேலும்
img
பெர்சத்துவில் முன்னாள் அம்னோ உறுப்பினர்கள் ஆதிக்கமா?

துன் மகாதீர் விளக்கம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img