வெள்ளி 22, பிப்ரவரி 2019  
img
img

யூ-டியூப் வீடியோக்களை பார்த்து சொந்த விமானம் தயாரித்துள்ள கம்போடிய மெக்கானிக்
சனி 03 ஜூன் 2017 15:33:00

img

கம்போடியா: கம்போடியா கார் மெக்கானிக் ஒருவர் யூடியூப் தளத்தில் வீடியோக்களை பார்த்து தனக்கென சொந்த விமானம் ஒன்றை தயாரித்துள்ளார். கம்போடியாவை சேர்ந்த 30 வயதான வர் பாயென்லாங், கார் மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். பகல் முழுவதும் கடுமையாக உழைக்கும் இவர், இரவில் தூங்காமல் விமானம் தயாரிப்பது சார்ந்த யூடியூப் வீடியோக்களை பார்த்து வந்துள்ளார். விமானம் தயாரிப்பில் அதிக ஆர்வம் கொண்ட இவர், தானும் ஒரு விமானத்தை தயாரிக்க வேண்டும் என முடிவு செய்தள்ளார். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் பயன்படுத்திய போர் விமானத்தை வாங்கி அதை சரி செய்யும் முயற்சியில் இறங்கினார். ஒற்றை இருக்கை கொண்ட போர் விமானத்தில் இருந்த பழைய கருவிகள் மற்றும் பொருட்களை உருக்கி அவற்றை இன்றைய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைத்துள்ளார். விமானம் முழுக்க தயாரானதும் கடந்த மார்ச் மாதத்தில் விமானத்தை வெற்றிகரமாக இயக்கியுள்ளார். வயல் வெளிக்கு அருகே அமைக்கப்பட்ட விமான தளத்தில் விமானத்தை நிறுத்தியிருந்தார். அந்த விமானத்தை 3 பேர் தள்ளி என்ஜினை இயங்க உதவி செய்தனர். இந்த விமானத்தை அவர் தனது வீட்டில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக தயாரித்துள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
அமெரிக்காவில் அவசர நிலை பிரகடனத்தை எதிர்த்து 16 மாநிலங்கள் வழக்கு 

மெக்சிகோ எல்லைச்சுவர் கட்டுவதில் உறுதியாக

மேலும்
img
ஊழல் வழக்கில் மாலத்தீவு முன்னாள் அதிபரை கைது செய்ய உத்தரவு 

முறைகேடாக நிதி திரட்டியதாக

மேலும்
img
பிரெக்சிட் விவகாரம்: 7 எம்.பி.க்கள் விலகல் 

பிரெக்ஸிட்டுக்காக ஐரோப்பிய கூட்டமைப்புடன்

மேலும்
img
சவூதி அரேபியாவில் பெண்களை கண்காணிக்க புதிய ஆப்

மனித உரிமை அமைப்பினர் கடும் எதிர்ப்பும்

மேலும்
img
2 ஆயிரம் பாகிஸ்தான் கைதிகளை விடுதலை செய்ய சவூதி இளவரசர் உத்தரவு 

சவூதி அரேபிய இளவரசர் முஹம்மது பின் சல்மான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img