புதன் 14, நவம்பர் 2018  
img
img

சூதாட்டமாக மாறிப்போன தங்க முதலீடு!
சனி 03 ஜூன் 2017 12:49:38

img

ஈப்போ தங்கத்தில் முதலீடு செய்வதனால் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை என்பதோடு தங்க விற்பனையில் பாரம்பரியமாக செய்து வந்த வர்த்தகர் மீது முழு மையான நம்பிக்கை வைத்து தங்க முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்தோம். ஆனால் அந்த நம்பிக்கை எங்களுக்கு பாதகத்தை ஏற்படுத்தியது.நம்பி மோசம் போனோம் என்று குமுறுகின்றனர் இந்தியர்கள். கைகளை பிசைந்து கொண்டு அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் தத்தளிக்கும் எங்க ளுக்கு விடியல் பிறக்குமா என்று காத்துக் கிடக்கின்றனர். 2006ஆம் ஆண்டு ஈப்போவில் ஒரே பரபரப்பான பேச்சு. நம்ப பத்துபகாட் சோங் பெஸ்தினோ தங்க முதலீட்டு திட்டத்தை ஆரம்பிச்சி நம்ம போடுற முத லீட்டுக்கு ஈடாக தங்கக் கட்டிகள் கொடுத்து அதற்கும் மேலாக மாதா மாதம் 3 விழுக்காடு லாப ஈவு கொடுக்கிறார் என்று என் நண்பர் கூற நானும் குறிப் பிட்ட அளவு முதலீடு செய்தேன். அவர்கள் சொன்னது போல எல்லாம் நடந்தது மாதா மாதம் வங்கியில் லாப ஈவு போடப்பட்டது. முதலீட்டுக்கு ஈடாக தங்கக் கட்டிகள் வழங்கப்பட்டன. ஓராண்டுகள் வரை எந்த ஒரு பிரச்சினையும் இல்லாமல் இருந்தது என்று முதலீட்டாளர் பெ.செங்கோடன் (வயது 75), கே.கண்ணையா (வயது 63) இங்கு கூறினர். அதிக லாபம் கிடைக்கிறது என்று சொத்துக்களை விற்றோம். இபிஎப் சேமிப்புகளை எடுத்தோம். தங்க ஆபரணங்களை அடகு வைத்தோம். குடும்பத்தினர் களிடம் பணம் பெற்றோம். இப்படியெல்லாம் சேர்த்த பணத்தை எல்லாம் பெஸ்தினோ முதலீட்டில் முதலீடு செய்தோம். ஆறு மாதம் முதல் ஒரு வருடம் வரை லாப ஈவு கிடைத்தது. அதற்குப்பிறகு இன்று வரை எந்தப் பணமும் எங்களுக்கு திரும்ப கிடைக்கவில்லை. எவ் வளவோ போராடினோம், போட்டிருந்த பணத்தை மீட்டாலே போதும் என்றாகி விட்டது என்று திருமதி அம்மணிராஜன் (வயது 60) கூறினார்.பெஸ்தினோ தங்க முதலீட்டுத் திட்டம் சட்டத்திற்கு புறம்பானது என்று பேங்க் நெகாரா நடவடிக்கை எடுத்த போது இந்நிறுவனத்தின் இடைத் தரகர்களாக செயல்பட்ட வர்கள் பயப்பட வேண்டாம். பணம் திரும்பக் கொடுத்து விடுவார்கள் என்று சொல்லியே ஆண்டு கடந்தது. ஆனால் பணம் கிடைத்தபாடில்லை என்று ராமையா கிருஷ்ணன் (வயது 66) கூறினார். பெஸ்தினோ முதலீட்டுத் திட்டம் ஒரு சூதாட்டமாக மாறிவிட்ட கதையாக இதில் முதலீடு செய்த சுமார் 6764 முதலீட்டாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். சுமார் 41 கோடி முதலீட்டுத் தொகையில் வெ.24 கோடியை மட்டுமே பேங்க் நெகாரா கைப்பற்றியது மீதத் தொகை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை யாருக்கும் தெரியாது. முதலீட்டாளர்களின் முதலீட்டுத் தொகையை திருப்பி கொடுப்பதாக பலமுறை வாக்குறுதி கொடுத்தும் அது நிறைவேற்றப்படவில்லை. சுமுகமாக பேசிப் பார்த்தோம், ஆர்ப்பாட்டம் செய்து பார்த்தோம், போலீஸ் புகார் செய்தோம், அமைச்சர் வரை முட்டி மோதினோம். எதற்குமே பெஸ்தினோ தங்க முதலீடு நிறுவன இயக்குநர்கள் பணியவில்லை. இதற்கு மேலும் மௌனம் காத்தால் கைப்பற்றப்பட்ட பணமும் கைமாறி விடும் என்று கருதி நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடுத்தோம் என்று விஜய் வேலாயுதம் கூறினார். நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சிறுபான்மை முதலீட்டாளர்கள் வழக்கு தொடுக்க தகுதிபெற்றுள் ளனர் என்று நீதிமன்றம் எங்களுக்கு சாதகமான தீர்ப்பை கொடுத்த போது எங்களுக்கு சிறு நம்பிக்கை துளிர் விட்டது. இதற்கு பிறகு பேச்சு வார்த்தை நடத்த பெஸ்தினோ நிறுவனம் முன் வந்தது. என்றாலும் அவர் பேச்சில் நம்பகத் தன்மையில்லாததால் தோல்வியில் முடிந்தது. நீதிமன்றத்தில் நியாயம் கேட்டு நிற்கின்றோம். எங்கள் கோரிக்கை முதலீட்டாளர்களுக்கு போட்ட பணம் திரும்ப கிடைக்க வேண்டும். எங்களின் சிறு பான்மை பங்குகளை வாங்கிக் கொண்டு பணத்தை தர வேண்டும். இந்நிறுவனத்தை நாங்கள் மீட்டுக் கொண்டு அதன் இயக்குநர்களை நீக்கிவிட்டு சுயேச் சையான இயக்குநர்கள் நியமிக்க வேண்டும். இக்கோரிக்கைகள் அடிப்படையில் வழக்கு தொடுக்கப்பட்டு அதன் செவிமடுப்பு ஜூன் 17, 18களில் ஈப்போ உயர்நீதிமன்றத்தில் நடக்கவிருக்கிறது என்று பெஸ்தினோ மீட்பு ஒருங்கிணைப்புக் குழுத் தொடர்பாளர் குணசேகரன் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img