வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

ரசித்தாரே தவிர வெறுக்கவில்லை'- கருணாநிதிக்கு ராமதாஸ் புகழாரம்
வெள்ளி 02 ஜூன் 2017 16:58:51

img

சட்டப்பேரவை வைரவிழா காணும் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ், 'கருணாநிதியை நான் பலமுறை உரிமையுடன் விமர்சித்திருக்கிறேன். அந்த விமர்சனங்களை கருணாநிதி ரசித்திருக்கிறாரே தவிர, ஒருபோதும் வெறுத்தது கிடையாது' என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தி.மு.க தலைவர் கருணாநிதியின் 94-வது பிறந்தநாள் விழாவும் சட்டப்பேரவை வைர விழாவும் நாளை கொண்டாடப்படுவதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைகிறேன். 94-வது பிறந்த நாள் காணும் நண்பர் கருணாநிதிக்கு, உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழகத்தில் மட்டுமன்றி, ஒட்டுமொத்த இந்தியாவிலும் மிக நீண்ட அரசியல் பயணம், கருணாநிதியுடையதுதான். திருவாரூர் மாடவீதிகளில் 14 வயதில் தொடங்கிய அவரது அரசியல் பயணம் ஈரோடு, காஞ்சிபுரம் வழியாக 80 ஆண்டுகளைக் கடந்து, கோபாலபுரத்தில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. தமிழ் நாட்டில் நான்கு தலைமுறைத் தலைவர்களுடன் அரசியல் செய்துவரும் பெருமை கருணாநிதிக்கு மட்டுமே உண்டு. கருணாநிதிக்கும் எனக்கும் அரசியல்ரீதியாக ஆயிரம் கருத்து வேறுபாடுகள் உண்டு.தமிழகத்தின் நலனுக்காக செயத்தக்கவையை செய்யாமைக் காகவும், செயத்தக்க அல்லவற்றைச் செய்தமைக்காகவும் கருணாநிதியை நான் பலமுறை உரிமையுடன் விமர்சித்திருக்கிறேன். அந்த விமர்சனங்களைக் கருணாநிதி ரசித்திருக்கிறாரே தவிர, ஒருபோதும் வெறுத்தது கிடையாது. அதே நேரத்தில் தமிழகத்துக்குத் தேவையான சீர்திருத்தங்களை மேற்கொண்ட தில் தந்தைப் பெரியார், அறிஞர் அண்ணா ஆகியோரின் வழியில் கருணாநிதி செய்த பங்களிப்பை ஒருபோதும் நான் மறுத்ததில்லை; அதை எவரும் மறுக்கவும் முடியாது. தமிழகத்தைக் கடந்து, அகில இந்திய அரசியலிலும் கருணாநிதி தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். பொதுவாழ்வில் 80 ஆண்டுகளைக் கடப்பதும், சட்டப் பேரவை உறுப்பினராக வைரவிழா காண்பதும் பெரும்பேறு. அப்பேறு, நண்பர் கருணாநிதிக்குக் கிடைத்திருப்பதில் மிக்க மகிழ்ச்சி. பொது வாழ்வில் நூற் றாண்டைக் கடந்தும் அவர் சேவையாற்ற வேண்டும் என்று கூறி, மீண்டும் ஒருமுறை வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img