வெள்ளி 22, பிப்ரவரி 2019  
img
img

மலேசிய ஏர்லைன்சுக்கு மீண்டும் சோதனை!
வெள்ளி 02 ஜூன் 2017 14:19:12

img

பெட்டாலிங் ஜெயா மலேசிய ஏர்லைன்ஸ் எம்.எச்.128, புதன்கிழமை இரவு வழக்கமாக ஆஸ்திரேலியா, மெல்பர்னிலிருந்து கோலாலம்பூருக்கு புறப்பட்டது. ஆனால் நடு வானில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக மீண்டும் அது மெல்பர்ன் திரும்பியது. பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். மலேசிய நேரப்படி, புதன் கிழமை இரவு 11.11 மணிக்கு மெல்பர்னின் துலாமரீன் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது. திட்டமிட்டபடி காலை 5.28 மணிக்கு அவ்விமானம் கோலா லம்பூரில் தரையிறங்கியிருக்க வேண்டும். எனினும், விமானம் புறப்பட்ட 20 நிமிடங்களில் அது திசைதிருப்பப்பட்டது. இரவு 10.31 மணி - எம்.எச்128 விமானத்தில் பயணித்த ஒரு மலேசியர் குறுந்தகவல் அனுப்புகிறார். விமானம் கடத்தப்படவிருப்பதாக அதில் குறிப்பிடப் பட்டிருந்தது. வெடிகுண்டு, ஆயுதங்கள் ஏந்திய ஆறு கடத்தல்காரர்கள் விமானத்தில் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவத் தொடங்கியது. இரவு 10.40 மணி - தன் வசம் வெடிகுண்டுகள் இருப்பதாகச் சொல்லி ஒரு பயணி விமானியின் அறைக்குள் நுழைய முற்பட்டதை தொடர்ந்து மலேசிய ஏர்லைன்ஸ் எம்.எச்128 மெல்பர்னுக்கு திரும்பியது என்று பிரெண்டன் கிரெய்கர் என்பவர் தனது டுவிட்டர் பதிவேற்றத்தில் கூறினார். இரவு 10.51 மணி - விமானத்தில் ஒரு பயணி குழப்பம் ஏற்படுத்தியதையும், விமானம் மெல்பர்ன் திரும்பியதையும் மலேசிய ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தி யது. இரவு 11.10 மணி - டுவிட்டர் பதிவேற்றங்கள் அதிகரித்தன. தொடக்கத்தில் நம்பப்பட்டதைப் போல அந்த பயணியிடம் வெடிகுண்டுகள் கிடையாது. மாறாக, மின்னணு கருவி ஒன்றை வைத்திருந்தார் என்று அதில் கூறப்பட்டது. இரவு 11.40 மணி - ஆயுதமேந்திய போலீசார் விமானத்தினுள் நுழைந்து, சம்பந்தப்பட்ட அந்த ஆடவரை அங்கிருந்து அலக்காக தூக்கிச் செல்வதை காட் டும் நிழற்படங்கள் சமூக வலைத்தளத்தில் பதிவாகின. இருக்கை வார்பட்டைகளால் கைகள் கட்டப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட அந்த ஆடவர் விமா னத்தின் தரையில் கிடப்பதைக் காட்டும் படமும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன. இரவு 12.09 மணி - குழப்பம் ஏற்படுத்திய அந்த பயணி தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், மற்ற பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் விமானத்தி லிருந்து வெளியேறி யதாகவும் மலேசியன் ஏர்லைன்ஸ் அறிவித்தது. காலை 8.47 மணி - மெல்பர்ன் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பிறகு பயணிகள் அனைவரும் அருகிலுள்ள விமான நிலையத்தில் தற் காலிகமாக தங்க வைக்கப்பட்டனர். வியாழக்கிழமை மலேசிய நேரப்படி மாலை 6 மணிக்கு விமானம் அங்கிருந்து புறப்பட்டு வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி அதிகாலை 12.35 மணிக்கு கோலாலம்பூரில் தரையிறங்கும் என்று தெரிவிக்கப்பட்டது. காலை 10.00 மணி - சம்பந்தப்பட்ட அந்த பயணி இலங்கை பிரஜை என்றும், அப்போதுதான் மனநோய் மருத்துவ மனையிலிருந்து வெளியாகி நேரே விமானத்தில் ஏறினார் என்றும் ஆஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்தன. இலங்கை பிரஜை கைது இதனிடையே, கைது செய்யப்பட்ட அந்த 25 வயது இலங்கை ஆடவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என்று விக்டோரியா போலீஸ் தலைவர், ஆணை யர் கிரெஹம் எஷ்ட்டன் கூறினார். அந்த ஆடவர் இசை ஒலிபெருக்கி ஒன்றை பிளாஸ்டிக் பையில் வைத்துக்கொண்டு, தன்னிடம் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டி, விமானியின் அறைக்குள் செல்ல கட்டாயப்படுத்தியதாக அவர் நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார். அந்த ஒலிபெருக்கி ஐ-ஃபோனை விட சற்று பெரியதாகும். அவர் மாணவர் விசாவில் ஆஸ்திரேலியாவில் தங்கி, உணவு விநியோகத் துறையில் கல்வி கற்று வந்துள்ளார். சம்பவ தினத்தன்று முன்புதான் மன நோய் மருத்துவமனையிலிருந்து வெளியாகியிருக்கிறார். இதில் பயங்கரவாத தொடர்பு ஏதும் இல்லை என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். அதிகப்பட்சம் பத்தாண்டுகள் சிறைத்தண்டனையை அவர் எதிர்நோக்கியுள்ளார். விமானத்தில் தீவிர சோதனை எம்.எச் 128 விமானத்தில் பாதுகாப்பு சோதனைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து அவ்விமானம் மெல்பர்னி லிருந்து கோலாலம்பூர் புறப்படும் என்று போக்கு வரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் கூறினார். விமானம் மீதும், அதன் பயணிகள் மீதும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் தீவிர சோதனை நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், அந்த ஆடவர் குடிபோதையில் இருந்தாரா என்று கேட்கப்பட்ட போது, இப்போது இதைப்பற்றி எதையும் உறுதிப்படுத்த இயலாது என்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் புலன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் சொன்னார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.

அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்

மேலும்
img
தேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும்.  ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.  

தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல

மேலும்
img
காப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து

மேலும்
img
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும்  பி.எஸ்.எச் உதவித் தொகை.

இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.

மேலும்
img
மின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர். 

அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img