செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

சென்னை சில்க்ஸ் கட்டடம் முழுவதும் இடிக்கப்படும்! ஆய்வுக்குப் பின்னர் அமைச்சர் தகவல்
வியாழன் 01 ஜூன் 2017 12:53:39

img

'சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பிறகு, அரசின் சார்பில் கட்டடம் இடிக்கப்படும்' என்று வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார். சென்னை உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில், நேற்று அதிகாலை 4 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. தரைதளத்தில் பற்றி எரிந்த தீ, 7 மாடிகளுக்கும் மளமளவெனப் பரவியது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கப் போராடிவருகின்றனர். இன்று அதிகாலை 3.30 மணி அள வில், 7-வது மாடி முதல் 2-வது மாடி வரை கட்டடம் இடிந்துவிழுந்தது. தொடர்ந்து தீ எரிந்துவருகிறது. இந்தத் தீ விபத்தில், எந்த உயிரிழப்பும் ஏற்பட வில்லை. கட்டடத்தை அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வுசெய்துவருகின்றனர். அசம்பாவிதம் நேரலாம் என் பதால், பொதுமக்கள் சென்னை சில்க்ஸ் கட்டடம் உள்ள பகுதிகளுக்கு வர தடை விதிக்கப்பட்டது. 'கட்டடம் இடிந்து விழுவதால், குடியிருப்புவாசிகள் மீண்டும் வீடுகளுக்குத் திரும்ப வேண்டாம்' என்று காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. நேற்று, புகை மூட்டத்தால் பெரும்பாலான குடியிருப்புவாசிகள் வீட்டைவிட்டு வெளியேற்றப்பட்டனர். இன்று அதிகாலை, 6 மாடிகள் இடிந்துவிழுந்ததைத் தொடர்ந்து, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், இன்று காலை கட்டடத்தை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிப்பதுகுறித்து ஆராய, 5 பேர் கொண்டு குழு அமைக்கப் பட்டுள்ளது. பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் ஜெய்சிங் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழு ஆலோசனைசெய்து, கட்டடத்தை இடிக்க முடிவுசெய்யப்படும். அமைச்சர்கள், அதிகாரிகளின் நேரடிப் பார்வையில் தீயை அணைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. உணவு தண்ணீர்கூட உட்கொள்ளாமல், தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்கப் போராடிவருகின்றனர். தீயணைப்பு வீரர்களுக்குத் தேவையான உபகரணங்கள் உடனுக்குடன் வழங்கப்படுகிறது. உஸ்மான் சாலை, பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டதால், உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. கட்டடத்தின் தூண்கள் பலமாக இருக்கின்றன. சுவர்கள் மட்டுமே பலவீனமடைந்துள்ளன. தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பிறகு, கட்டடத்தை அகற்ற அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். அருகாமையில் உள்ள கடைகள், வீடுகளுக்கு சேதாரம் இல்லாமல் தீ விபத்துக்குள்ளான கட்டடம் அகற்றப்படும். சென்னை சில்க்ஸ் கட்டப்பட்டதில் விதிமீறல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். கட்டடத்தை இடிக்க ஐஐடி நிபுணர்களின் ஆசோசனை கேட்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img