புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

நிரந்தர நிலம் கோரும் 52 இந்தியக் குடும்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு இல்லையா?
வியாழன் 01 ஜூன் 2017 12:08:52

img

ஈப்போ பல ஆண்டு காலமாக பலகை வீடுகளில் வாழ்ந்து வரும் ஜாலான் கோலகங்சார், கம்போங் ஹாக்கைச் சேர்ந்த 52 இந்திய குடும்பங்கள், நிரந்தர நிலம் கோரி, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்னெடுத்த தங்களின் போராட்டத்திற்கு இன்னமும் நிரந்தரத் தீர்வு காணப்படாதது, அவர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தி வருகிறது. ஜாலான் கோலகங்சார் பகுதியையொட்டி அமைந்துள்ள இப்புறம்போக்கு நிலத்தில் கடந்த 45 ஆண்டு காலமாக 52 இந்திய குடும்பங்கள் வசித்து வந்தன. 2006 ஆம் ஆண்டு இப்பகுதியில் குடியிருப்பவர்களுக்கு இதே இடத்தில் நிலம் கோரி விண்ணப் பம் செய்யப்பட்டது என்றாலும் மேற்கொள்ளப்பட்ட முயற் சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால் இக்கம்பத்து நிலப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படாமல் இழுபறி நிலை ஏற்பட்டது என்று நிலப் பிரச்சினை தீர்வு குழு பொறுப்பாளர் எஸ்.குணசீலன் கூறினார். நேற்று இக்குள்ள மாநில நில அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட வர்களுடன் நில இலாகா அதிகாரிகள் நோர்டினா, முகமட் ரமடான் ஆகியோர் தலைமை யில் இறுதி கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்நிலத்தை மேம்படுத்தி அடிப்படை வசதிகள் செய்து தருவதற்கு வரைபடங்கள் எல்லாம் நில மேம் பாட்டாளரிடம் வழங்கப்பட்ட நிலையில் இதற்கு கட்டணமாக வெ.17ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கு குடியிருப்பாளர்கள் மத்தியில் ஆட்சேபம் எழுந்தது என்றாலும் இக் கட்டணத்தை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதி அளிக்கப்பட்டது என்று கூறினார். ஒவ்வொரு பொதுத் தேர்தல் காலத்தில் இந்நிலப் பிரச்சினை தலைதூக்கும் பொதுத் தேர்தல் முடிந்ததும் நிலப் பிரச்சினையை யும் முடங்கிவிடும். இப் பொழுது 14ஆவது பொதுத் தேர்தல் வரக்கூடிய சூழ்நிலையில் மீண்டும் இந்நிலப் பிரச்சினை தலைதூக்க தொடங்கியுள்ளது. இந்த முறையாவது இதற்கு நிரந்தர தீர்வு கிட்டுமா? என்று இப்பகுதியில் 20 வருடமாக வசித்து வந்த சுப்ரமணியம் (வயது 63), பத்மநாபன் (வயது 47) கருத்துரைத்தனர். மழைக் காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளம் வடிவதற்கு பல நாட்கள் ஆகும் நிலையில் பாம்பு, பூராண், விஷ ஊர்வனங்கள் மிரட்டலில் பிள்ளைகளை வைத்துக் கொண்டு பெரும் அவதிப்பட்டோம் என்று திருமதி பாலம்மா (வயது 52) திருமதி தமிழ்ச் செல்வி கூறினார். பல துயரங்களுக்கு மத்தியில் இனியும் இங்கு வசிக்க முடியாது என்று வாடகை வீட்டிற்கு குடியேறிவிட்டோம். பல வருடங்களாக வாடகை செலுத்தி சிரமத்தில் வாழ்கிறோம் என்று கூறினார்.2006 தொடங்கி இதுநாள் வரையில் எந்த ஒரு நிரந்தரத் தீர்வும் காணப்படாத சூழ்நிலையில் மீண்டும் ஒரு பேச்சு வார்த்தைக்கு அழைத்திருக்கிறார்கள். ஏற்கெனவே பேசியபடி நிலத்தை மேம்படுத்தி லாட்டுகள் கொடுப்பதற்கு வெ.13 ஆயிரம் நிர்ணயம் செய்திருந்தனர். இப்பொழுது புதிதாக நியமிக்கப்பட்ட நில மேம்பாட்டாளர் வெ.17 ஆயிரம் நிர்ணயம் செய்திருக்கிறார். ஏன் இந்த வேறுபாடு? நாங்கள் பெரும் சிரமத்தில் இருக்கின்றோம். அரசாங்கம் எங்களுக்கு உதவி செய்ய வேண்டுமே தவிர எங்களுக்கு சுமையை கொடுக்கக் கூடாது என்று திருமதி மல்லிகா (வயது 40) கூறினார்.இந்நிலப் பிரச்சினைக்கு நிரந்தரமான ஒரு தீர்வு காணப்பட வேண்டிய கட்டாயம் இப்பொழுது ஏற்பட்டுள்ளதால் நில நடவடிக் கைக் குழு விவேகமாக செயல்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். வெள்ளத்திலும், பாம்பு, கொசு கடியிலும் இனியும் இங்கு குடியிருக்க முடியாத ஒரு சூழ்நிலையில் இப்பகுதியி லிருந்து பலர் வெளியேறி யுள்ளதால் இந் நிலத்தை மேம் படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என்று பெரிதும் எதிர்பார்க்கிறோம் என்று சய்தூன் மைடின், ஆர்.உமாதேவி கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img