ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

தேர்தலில் வெற்றி, தோல்வியை நிர்ணயிப்பது நாம்தான்.
புதன் 31 மே 2017 16:12:13

img

அரசியலில் அதிர்ச்சி, அதிரடி மாற்றத்தைத் தந்த 2008-ஆம் ஆண்டு தேர்தல் சுனாமியிலிருந்து மீண்டு வர முடியாமல் ம.இ.கா. இன்னும் தத்தளிக்கும் வேளையில், தேசிய முன்னணியின் முக்கியமான தலைவர்கள் பலர் வெற்றி பெற்ற தொகுதிகளில் இந்தியர்களின் வாக்குகளே அவர்களின் தலை விதியை நிர்ணயிக்கும் வாக்குகளாக அமைந்துள்ளன என்பதை மறுக்க முடியாது. இந்தியர்களை பெரும்பான்மை வாக்காளர்களாகக் கொண்ட தொகுதிகளில் களம் இறங்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருப்பதால் ம.இ.கா. தலைவர்கள் இம்முறை தங்கள் செயலாக்கத்தை இரட்டிப்பாக்கும் ஒரு சூழ்நிலையில் இருக்கின்றனர். தவறினால், 14-ஆவது பொதுத்தேர்தல் மற்றுமொரு பேரடியாக அக்கட்சிக்கு விளங்கும் என்பதில் ஐயமில்லை என்று மலேசிய நண்பன் கருதுகிறது. கடந்த 13-ஆவது பொதுத்தேர்தலில் தேசிய முன்னணி கைப்பற்றிய தொகுதிகளில் 31 நாடாளுமன்றம், 59 சட்டமன்றத் தொகுதிகளில் இந்தியர்களே வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் அதிகாரத்தை கொண்டுள்ளனர் என்று தெரிய வருகிறது. சமூக வலைத்தளங்களில் இது அண்மையில் அதிகமாகப் பகிரப்பட்ட ஒரு விஷயம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள தொகுதிகளாகும். இவை யாவும் தேசிய முன்னணி மிகவும் குறைவான பெரும்பான்மையில் வெற்றி பெற்ற தொகுதிகளாகும் என்பதும் இங்கு கவனிக்கப்பட வேண்டிய சுவாரஸ்யமான விஷயமாகும். எதிர்க்கட்சிகள் விழித்துக்கொண்டதற்கு ஒரே காரணம்தான் உள்ளது. அத்தொகுதிகள் அனைத்திலும் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி இந்திய வாக்காளர் களின் கைகளில் உள்ளது என்பதுதான் உண்மை. அத்தொகுதிகளில் உள்ள இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை வெற்றியைத் தந்த பெரும்பான்மையை விட அதிகம் என்பது வெளிப்படையான உண்மை. ஆகவே, இந்த குறிப்பிட்ட தொகுதிகளில் இந்திய வாக்காளர்கள் எடுக்கக்கூடிய முடிவு அவற்றின் தலைவிதியை நிர்ணயிக்கும் என்று அறுதியிட்டுக் கூற லாம். துருப்புச் சீட்டு நம் வசம் என்பதை மறுத்துவிட முடியாது. இதன் அடிப்படையில் கடந்த 13-ஆவது பொதுத்தேர்தல் நிலவரத்தை கண்ணோட் டமிடுவோம்: உதாரணமாக, துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹிட் ஹமிடியின் பாகான் டத்தோ (பேரா) நாடாளுமன்றத்தொகுதியில் 9,423 வாக்காளர்கள் உள்ளனர். அவர் அங்கு 2,108 வாக்குகள் பெரும்பான்மையில் மட்டுமே வெற்றி பெற்றார். இது மிகவும் குறைவான பெரும்பான்மையாகும். ஆனால், இந்த முறை (14-ஆவது பொதுத்தேர்தல்) அந்த 2,108 வாக்காளர்களில் பாதிப்பேர் என 1,054 பேரின் வாக்குகள் தடம் மாறினாலே போதும் ஜாஹிட் வெறும் வர லாற்றில்தான் இடம்பெறுவார் என்பது அரசியல் வட்டாரங்களின் கணிப்பு. பாடாங் ரெங்காஸ் - சுற்றுலா பண்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அஜிஸ் பாடாங் ரெங்காஸ் (பேரா) நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஆவார். கடந்த தேர்தலில் இவர் 2,230 என்ற மிகவும் குறுகிய பெரும்பான்மையில்தான் வென்றார். இத்தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்களின் எண் ணிக்கை 2,031. இங்குள்ள 1,115 வாக்காளர்கள் திசை மாறினால் போதும், பாடாங் ரெங்காஸில் நஸ்ரியின் தோல்வி உறுதி. தெலுக் இந்தான் - தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள இந்திய வாக்காளர்களின் எண்ணிக்கை 11,491. இத்தொகுதியின் உறுப்பினர் ம.சீ.ச- வின் டத்தோஸ்ரீ மா சியூ கியோங் ஆவார். கடந்த தேர்தலில், மிகவும் குறைவான பெரும்பான்மையாக 238 வாக்குகளில் மட்டுமே இவரால் வெற்றி பெற முடிந்தது. இங்கு அவரின் வெற்றியை நிர்ணயித்தது இந்திய வாக்குகள் என்பதை மறுக்க முடியாது. தஞ்சோங் மாலிம் - தஞ்சோங் மாலிம் நாடாளுமன்றத் தொகுதி தற்போது ம.சீ.ச வசம் உள்ளது. இங்கு 9,062 இந்திய வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியின் வேட்பாளரான ஓங் கா சுவான் கடந்த தேர்தலில் 4,328 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார். வரும் தேர்தலில் இந்திய வாக்காளர்களின் வாக்குகள் கட்சி மாறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். லாபிஸ் - ஜொகூரின் லாபிஸ் நாடாளுமன்ற தொகுதியில் ம.சீ.ச-வின் சுவா தீ யோங் மிக, மிகக் குறைவாக 353 வாக்குகள் பெரும்பான்மையில் மட் டுமே வெற்றி பெற்றார். இங்கு மொத்தம் 5,698 வாக்காளர்கள் உள்ளனர். சுமார் 177 பேர் இவருக்கு வாக்களிப்பதற்கு எதிராக முடிவெடுத்தால் போதும். தேசிய முன்னணி தோற்றுப்போகும். பாசிர் கூடாங் - பாசிர் கூடாங் (ஜொகூர்) நாடாளுமன்ற தொகுதி மொத்தம் 11,194 இந்திய வாக்காளர்களை கொண்டுள்ளது. இத்தொகுதி வேட்பாளரான அம்னோவின் நொர்மலா அப்துல் சாமாட் கடந்த தேர்தலில் 935 வாக்குகள் பெரும்பான்மையில் வென்றார். எனினும், இங்குள்ள இந்தியர்கள் நொர்மலா மீது அதிருப்தி அடைந்துள்ளதாகவும் தெரிய வருகிறது. பூலாய் - மொத்தம் 10,090 இந்திய வாக்காளர்களை கொண்ட பூலாய் (ஜொகூர்) தொகுதியை அம்னோவின் நூர் ஜஸ்லான் 3,226 வாக்குகள் பெரும் பான்மையில் தக்கவைத்துக் கொண்டார். கோலசிலாங்கூர் -சிலாங்கூர் மாநிலத்தின் கோலசிலாங்கூர் தொகுதியில் 460 வாக்குகள் வித்தியாசத்தில் அம்னோவின் இர்மோஹிஜாம் அப்ராஹிம் வெற்றி பெற்றார். இங்கு 13,730 இந்திய வாக்காளர்கள் உள்ளனர். இப்படி இன்னும் பல்வேறு தொகுதிகளில் இந்திய வாக்காளர்களை முன் நிறுத்தி எதிர்க்கட்சிகள் களம் இறங்கும் என்பது உறுதியாகியுள்ளது. அதே சம யம், ம.இ.கா. அதன் வேட்பாளர்களை நிறுத்தக்கூடிய அனைத்து தொகுதிகளிலும் அதன் வேட்பாளர்களை கடுமையான மோதலை எதிர்நோக்குவர் என் பதும் உறுதியாகியுள்ளது. மலேசிய நண்பன் தொடர்ந்து, இந்திய வாக்காளர்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகள் பற்றிய ஆய்வினை நடத்தி வரும் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் ம.இ.கா-வின் நிலவரம் கடந்த 13-ஆவது பொதுத்தேர்தலும் ம.இ.கா-விற்கு மிகப்பெரிய தோல்விகளையே ஏற்படுத்தியது. அக்கட்சி போட்டியிட்ட 9 நாடாளுமன்றத் தொகு திகளில் தாப்பா, சிகாமட், உலுசிலாங்கூர், கேமரன் மலை ஆகிய நான்கு தொகுதிகளை மட்டுமே அதனால் தக்கவைத்துக் கொள்ள முடிந்தது. தாப்பாவில் மத்திய செயலவை உறுப்பினர் டத்தோ எம்.சரவணனும், சிகாமட்டில் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியமும், உலுசிலாங்கூரில் துணை அமைச்சர் டத்தோ பி.கமலநாதனும், கேமரன் மலையில் முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலும் வெற்றி பெற்றனர். சுங்கை சிப்புட் (பேரா), காப்பார், சுபாங், கோத்தா ராஜா (சிலாங்கூர்), தெலுக் கெமாங் (நெகிரி செம்பிலான்) ஆகிய தொகுதிகளில் ம.இ.கா.விற்கு தோல்வி ஏற்பட்டது. சுங்கை சிப்புட்டில் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவருக்கு 18,800 வாக்குகள் கிடைத்த வேளையில், இவரை எதிர்த்துப் போட்டியிட்ட பி.எஸ்.எம்.கட்சியின் மைக்கல் ஜெயகுமாருக்கு 21,593 வாக்குகள் கிடைத்தன. மொத்தம் 2,793 வாக்குகள் வித்தியாசத்தில் தேவமணி தோல்வியைத் தழுவினார். இங்கு மும்முனை போட்டி நிலவியது. காப்பார் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 144,369. ம.இ.கா சார்பாக சக்திவேல் அழகப்பன் அங்கு நிறுத்தப்பட்டார். மொத்தம் 46,059 வாக்குகள் பெற்று தோற்றுப்போனார். இவரை எதிர்த்து பி.கே.ஆர்-இன் மணிவண்ணன் கோவிந்தசாமி 69,849 வாக்குகளில் வெற்றி பெற்றார். பெரும்பான்மை வாக்குகள் 23,790 ஆகும். இங்கு அறுவர் களத்தில் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதியில் பாஸ் கட்சியின் வேட்பாளர் சித்தி மரியா மஹ்மூட்டிடம் ம.இ.கா வேட்பாளர் டத்தோ முருகேசன் சின் னாண்டவர் 29,711 வாக்குகளில் தோல்வியுற்றார். சித்தி மரியாவிற்கு 59,106 வாக்குகள் கிடைத்தன. பெரும்பான்மை வாக்குகள் 29,395 ஆகும். இங்கு நான்கு முனை போட்டி நிலவியது. சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட உதயக்குமார் பொன்னுசாமிக்கு 2,364 வாக்குகள் கிடைத்தன. தெலுக் கெமாங் தொகுதியில் ம.இ.கா வேட்பாளராக டத்தோ மோகன் வேலாயுதம் நிறுத்தப்பட்டார். மும்முனை போட்டியில் மோகனுக்கு 28,269 வாக் குகளும், பி.கே.ஆர் கட்சியின் கமாருல் பஹரின் அபாஸுக்கு 29,848 வாக்குகளும் விழுந்தன. பெரும்பான்மை வாக்குகள் எண்ணிக்கை 1,579 ஆகும். சுபாங் தொகுதியில் ஐவர் களத்தில் இறங்கினர். ம.இ.கா. வேட்பாளரான பிரகாஷ் ராவ் 39,549 வாக்குகளில் தோல்வியுற்றார். இவருக்கு சரிநிகர் போட்டி கொடுத்த கே.சிவராசா 66,268 வாக்குகளைப் பெற்றார். பெரும்பான்மை வாக்குகள் 26,719. இங்குள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 128,677 ஆகும். மேற்கண்ட நாடாளுமன்ற தொகுதிகளில் (தெலுக் கெமாங்கை தவிர்த்து) அதிகப் பெரும்பான்மையில் ம.இ.கா வேட்பாளர்கள் தோல்வியுற்றதால் இம்முறை அங்கு போட்டியிடும் வேட்பாளர்களால் மீண்டு வர முடியுமா என்பது கேள்விக்குறியே.சட்டமன்றங்களின் நிலவரங்களை நாளை காண்போம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img