செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

தமிழகத்தைத் தமிழன்தான் ஆள வேண்டும்
செவ்வாய் 30 மே 2017 18:40:22

img

தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்தான் தலைவனாக வேண்டும். இந்த மண்ணை ஆள்வதற்கு அயலானுக்கு உரிமை யில்லை என்று ஆவேசமாகக் கூறினார் இயக்குநர் பாரதிராஜா. தமிழகத்தில் யார் வேண்டுமானாலும் காசு சம்பாதிக்கலாம். ஆனால் தலைமை பொறுப்பிற்கு யாரும் வரத் தேவையில்லை என்று இயக்குனர் பாரதிராஜா காட்டமாக தெரிவித்துள்ளார். தமிழகம் பிரிந்து கிடக்கிறது, வெட்டி குத்திக்கொண்டு கிடக்கிறது என்றால் அதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். என் பெண்டாட்டிக்கு பிள்ளை இல்லை என்றால் அதை நான் பார்த்துக் கொள்கிறேன் உனக்கு ஏன் அக்கறை. என் படுக்கையில் நீ பங்கு கேட்காதே. என் பெண்டாட்டிக்கு பிள்ளை ஊனமாக பிறக்கும் என்பதால் நீ வந்து பிள்ளை கொடுப்பாயா. தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும், யார் வேண்டு மானாலும் இங்கு வந்து பணம் சம்பாதிக்கலாம், ஏன் அரசியலுக்குக் கூட வரலாம் ஆனால் தலைமை தமிழனாகத் தான் இருக்க வேண்டும்.தமிழகத்தில் இரு அணிகளும் தலையாட்டி பொம்மைகளைப் போல உள்ளன. ஏதாவது ஒன்றாவது உருப்படியாக இருக்கும் என நினைத்தேன், ஆனால் அப்படி எதுவும் நடைபெறவில்லை. திருமுருகன் மீதான வழக்கு தமிழக அரசின் சொந்த கருத்தில்லை யாரோ ஆட்டிவைப்பதற்கு ஆடும் கைப் பாவையாக உள்ளது என்று விமர்சித்துள்ளார் பாரதிராஜா. மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோர் தலைமை யில் மெரினாவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, சட்டவிரோதமாகக் கூடியதாகக் கூறி திருமுருகன் காந்தி உள்பட நான்கு பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், நான்கு பேர்மீதும் நேற்று குண்டர் சட்டம் பாய்ந்தது. இந்த நடவடிக்கையை எதிர்த்து இன்று சேப்பாக்கத்திலிருக்கும் சென்னை பத்திரிகையாளர்கள் மன்றத்தில் திரைப்பட இயக்குநர்கள் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்து தங் களின் கண்டனங்களைப் பதிவு செய்தனர். அப்போது பேசிய இயக்குநர் பாரதிராஜா, 'திருமுருகன் என்ன கொலையாளியா, எதற்காக அவர்மீது குண்டர் சட்டம் பதிவு செய்யப்பட்டது, யாரும் மத்திய அரசை விமர்சிக்கவே கூடாதா, அப்படி விமர்சித்தால் என்ன தவறு இருக்கிறது. அதற்காக அவர்மீது குண்டர் சட்டத்தைப் போடுவதா. நானும்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் நினைவேந்தலுக்குப் போயிருக்கிறேன். நான் பிரபாகரனையே நேரில் சந்தித்திருக்கிறேன். அதைப்பற்றி பொதுத்தளத்திலும் பேசி யிருக்கிறேன். அதற்காக என்மீதும் குண்டர் சட்டத்தைப் பதிவு செய்யுங்கள். தமிழகத்தைப் பொறுத்தவரை, இந்த மண்ணுக்குச் சொந்தமானவர்தான் தலைவனாக வேண்டும். இந்த மண்ணை ஆள்வதற்கு அயலானுக்கு உரிமை யில்லை. வேறு எந்த இடத்திலாவது போய் தமிழன் தலைவனாக முடியுமா, அரசியல் செய்ய முடியுமா, ஆட்சியில் உட்கார முடியுமா. மற்ற மாநிலத் தவர்களை அரவணைப்போம். அதற்காக சமபங்கு கொடுக்கமுடியாது. இனம் மற்றும் மொழி விஷயத்தில் தமிழர்களுக்குத் துருப்பிடித்துவிட்டது. தமிழர்களுக்கே ஈழத்தைப் பற்றியும் அங்கு நடந்த இனப்படுகொலை பற்றியும் தெரியாத நிலையுள்ளது. அதைப்பற்றி விழிப்பு உணர்வு ஏற்படுத்தவே, மெரினா கடற்கரையில் ஒவ்வோர் ஆண்டும் நினைவேந்தல் நடத்தப்படுகிறது. மடியில் கனம் இருப்பதால் மத்திய அரசுக்குப் பயந்து இந்தக் கைது நட வடிக்கையைச் செய்துள்ளது தமிழக அரசு. ரோஷம், மானம் இருந்தால் தமிழக அரசு நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று காட்டமாகக் கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img