வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

எவரெஸ்ட் மலை ஏறி ராமன் நாயர் சாதனை
செவ்வாய் 30 மே 2017 14:21:17

img

எவரெஸ்ட் மலை உச்சியை தொட்டுவிட வேண்டும் என்பது ஒரு மலேசியரான ராமன் நாயர் அச்சுதனின் 10 ஆண்டுகளுக்கும் மேலான கனவு. பல போராட்டங்களுக்கிடையே மே 20-ஆம் தேதி தனது கனவை நிறைவேற்றி எவரெஸ்ட் மலை உச்சியில் கால் பதித்தார். கடல் மட்டத்திலிருந்து 8,848 மீட்டருக்கு உயரே எவரெஸ்ட் மலையேறி சாதனை படைத்தார் ஷா ஆலமைச் சேர்ந்த 42 வயது ராமன் நாயர்.இவர் இம்மாதம் 5.5.2017ஆம் தேதி நோப்பாளத்திலுள்ள லுக்லா நகரிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். நான் இவ்வளவு நாட்கள் மேற்கொண்ட பயிற்சிக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. முதன் முதலில் நான் எவரெஸ்ட் மலையை ஏறுவதற்கு முடிவு செய்தபோது, துணிச்சல்தான் மிகவும் முக் கியம் என்பதை நான் உணர்ந்தேன். இதற்கு ழுழு நம்பிக்கையும், மன உறுதியும், துணிச்சலும் வேண்டும். சற்று தடுமாறினாலும் மரணம்தான் என்பதை அறிந்தே நான் இந்த சாகசத்தில் ஈடுபட்டேன். கார் பழுதுபார்க்கும் துறையில் ஈடுபட்டுள்ள இவர், பல்வேறு அனுபவங்களை அங்கு எதிர்நோக்கியிருந்தார். அதிக குளிர் காரணமாக அவரின் ஒரு விரலும், காலும் பாதிக்கப்பட்டன. அவர் அதற்காக தற்போது சிகிச்சைப் பெற்று வருகிறார். பலர் எவரெஸ்ட் மலையை ஏறும்போது அவர்களைப் பார்த்து தாமும் ஏன் ஏறக்கூடாது என்ற கேள்வி தம்முள் தோன்றியதாகவும், அதன் பின்னரே அதில் ஏறுவதற்கு தாம் முடிவு செய்ததாகவும் அவர் சொன்னார்.கடந்த ஆண்டு முதல் தாம் கடுமையான பயிற்சிகளில் ஈடுபட்டு வந்ததாகவும், அதற்கு முன்பு தாம் 6,145 மீட்டர் கொண்ட நோப்பாளிலுள்ள லோபுச்சே மலையை ஏறியதற்காகவும் அவர் சொன்னார். கடந்த 1953ஆம் ஆண்டு சர் எட்மெண்ட் ஹிலரி மற்றும் தென்ஸிங் நோர்காய் ஆகியோர் முதன் முதலாக எவரெஸ்ட் மலையைத் தொட்டனர். இதுவரை அந்த மலையை ஏறி 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img