செவ்வாய் 22, ஜனவரி 2019  
img
img

மீன்களின் விலை திடீர் ஏற்றம்
திங்கள் 29 மே 2017 17:55:23

img

தெலுக் இந்தான் பல்வேறு பகுதிகளில் மீன்களின் விலை திடீர் ஏற்றம் கண்டு இருப்பது பயனீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கெம்போங் மீன், சிவப்பு மீன், கணவாய், இறால் போன்றவை வழக்கத்திற்கு மாறாக விலை ஏற்றம் கண்டு இருப்பது பயனீட்டாளர்களை ஏமாற்றத்திற்கு ஆழ்த்தியுள்ளது. நாட்டில் மீன் உற்பத்தியில் தெலுக் இந்தான் 29 முதல் 32 விழுக்காடு வரையில் பங்களிப்பை வழங்கி வருகிறது. இங்குள்ள மீனவர்கள் மலாக்கா நீரிணையில் மீன் பிடிக்கின்றனர்.மீன் உற்பத்திக்கு முக்கிய இடமாக இருக்கும் தெலுக் இந்தான் உட்பட கீழ்ப் பேரா மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் மீன்களின் விலை முந்தைய விலையுடன் ஒப்பிடுகையில் ஆறு, ஏழு வெள்ளி விலையேற்றமாக இருக்கிறது என்று மக்கள் கூறுகின்றனர். கிலோ 12 வெள்ளிக்கு விற்பனை செய்யப்பட்ட கெம்போங் மீன் 16 அல்லது 17 வெள்ளிக்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோ 13 வெள்ளியாக விலை நிர்ணயிக்கப்பட்ட மம்போங் வகையை சேர்ந்த மீன் கிலோவிற்கு 20 முதல் 28 வெள்ளி வரையில் விற்கப்படுகிறது. உரிப்பாறை கிலோவிற்கு 17 வெள்ளி, ஈக்கான் காயு கிலோ 18 வெள்ளி, தேங்காய்ப்பாறை கிலோ 15 வெள்ளி, மடவாப் பொடி கிலோ வெள்ளி 12, ஈகான் லெம்பே சிறியது கிலோ 12 வெள்ளி, பெரியது கிலோ 17 வெள்ளி முதல் 20 வெள்ளி வரை திருக்கை சிறியது கிலோ 15 வெள்ளி, பெரியது வெள்ளி 25, காளான் மீன் பெரியது கிலோ 35 முதல் 40 வெள்ளி வரை வஞ்சனை மீன் பெரியது கிலோ 35 முதல் 40 வெள்ளி வரை, பவாய் ஈத்தாம் உள்ளு கிலோ 25 முதல் 30 வெள்ளிவரை பாவாய் தம்பா சாம்பல் நிற வௌவால் கிலோ 70 வெள்ளி, பெரிய கடல் இறால் கிலோ 55 முதல் 60 வெள்ளி வரை, கடல் நண்டு கிலோ 26 முதல் 30 வெள்ளி வரை விற்கப்படுகிறது. ரோஸ் கலர் சிவப்பு மீன் பெரியது கிலோ 18 வெள்ளி, நடுத்தரம் கிலோ 16 வெள்ளி, சோலோ இறால் கிலோ 19 வெள்ளி, வெள்ளை இறால் கிலோ 17 வெள்ளி அவித்தமீன் கிலோ 20வெள்ளி நெத்திலி பங்கோர் கிலோ 60 வெள்ளி பூலாவ் லங்காவி நெத்திலி கிலோ 55 வெள்ளி வரை விற்கப்படுகின்றது. இந்த நிலையில் ஏழை எளியவர்கள் எப்படி மீன்கள் சாப்பிடுவார்கள், கோழிவிலை 8.50 முதல் 10.00 வெள்ளி வரை விற்கப்படுகிறது. உள்நாட்டு வர்த்தக பயனீட்டாளர் கூட்டுறவு கழக அமைச்சு இந்த நோன்பு பெருநாளின் போது மீன் காய் கறி கோழி இறைச்சி விலையைக் கட்டுப் படுத்துவதுடன் அத்தியாவசிய உணவு பயனீட்டு பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ஏழை எளிய மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசாங்கம் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சிறப்பு போனசை வழங்கி வருகிறது தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பள உயர்வோ வேறு சலுகையோ கிடையாது. இந்த நிலையில் நாங்கள் எப்படி சமாளிப்பது ஜூன் மாதம் வழங்கப்படும் 400 வெள்ளி பிரிம் தொகையை வைத்துக் கொண்டு எப்படி சமா ளிப்பது என்றும் ஏழை எளியவர்கள் கண்ணீருடன் தங்கள் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img