செவ்வாய் 19, பிப்ரவரி 2019  
img
img

சர்வதேச வாள்வீச்சில் இந்தியாவுக்கு முதல் தங்கம்
திங்கள் 29 மே 2017 12:25:45

img

சர்வதேச வாள்வீச்சுப் போட்டியில், இந்தியா சார்பில் பங்கேற்று தங்கம் வென்று அசத்தியிருக்கிறார், தமிழக வீராங்கனை பவானி தேவி. இந்தியாவின் முன்னணி வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி, தேசிய அளவிலும் ஆசிய அளவிலும் பல பதக்கங்களைக் கைப்பற்றியவர். சென்னையைச் சேர்ந்தவரான இவர், முதன்முறையாக சர்வதேச வாள்வீச்சில் தங்கம் வென்றுள்ளார். ஐஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற சர்வதேச ’டர்னாய் சாட்டிலைட் வாள்வீச்சு’ப் போட்டியில், ‘சேஃபர்’ பிரிவில் தங்கம் வென்றுள்ளார். நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில், இங்கிலாந்து வீராங்கனை சாரா ஹம் சனை எதிர்த்துப் விளையாடினார். இறுதிச்சுற்றில் 15-13 என்ற கணக்கில் ஹம்சனை வீழ்த்தியவர், தங்கப்பதக்கம் கைப்பற்றி அசத்தினார். உலக அளவில் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில், இந்தியா பெறும் முதல் தங்கப்பதக்கம் இது. இதற்கு முன்னர் நடந்த இதே சாட்டிலைட் போட்டியில், இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் பெற்றுத்தந்தவர், பவானி தேவி என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயார்!

எல்லையில் வெடி பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த தீவிரவாதிவிமானங்கள்

மேலும்
img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img