புதன் 14, நவம்பர் 2018  
img
img

ஜூன் 3ம் தேதி தொண்டர்கள் அனைவரும் சென்னையில் திரள வேண்டும்
ஞாயிறு 28 மே 2017 14:09:22

img

சென்னை, தமிழக சட்டசபையில் அடியெடுத்த வைத்து 60 ஆண்டுகளை நிறைவு செய்வதையொட்டி திமுக தலைவர் கருணாநிதிக்கு சென்னையில் வைர விழா கொண்டாடப்படுகிறது, அவரது அவரது 94வது பிறந்தநாளான ஜூன் 3ம்தேதி சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் சிறப்பான ஏற்பாடுகள் திட்டமிடப் பட்டுள்ளன. இந்த விழாவில் லாலுபிரசாத் யாதவ், ராகுல் காந்தி, நித்திஷ் குமார், டி.ராஜா, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திமுக தலைவர் கருணாநிதியின் வைர விழா தொடர்பாக தொண்டர்களுக்கு செயல் தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்தநாளையும், வைர விழாவையும் இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விழாவாக்க வேண்டும். திமுக வலிமையுடன் நிலைத்திருப்பதற்கு காரணம் திமுக தலைவர் கருணாநிதியின் உறுதிமிக்க நிலைப்பாடு. ஜூன் 3ம் தேதி தொண்டர்கள் அனை வரும் சென்னையில் திரள வேண்டும். கருணாநிதியின் பிறந்தநாள் விழா, வைரவிழா ஆகியவற்றை இந்திய அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும் விழாவாக்கும் வகையில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
7 பேரா? எந்த 7 பேர்..களத்திற்கும் வருவதில்லை, அரசியலை கவனிப்பதும் இல்லை,

உள்ள தனது இல்லத்தில் ரஜினிகாந்த்

மேலும்
img
நான் சென்சார் போர்டு கிடையாது’- அமைச்சர் ஜெயக்குமார்

இதே ரஜினிகாந்த் நேற்றைய செய்தியாளர்கள்

மேலும்
img
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் முன்பு அடிதடி - நாற்காலிகள் பறந்தன!

கூட்டத்தை ஆத்தூர் ஒன்றிய அண்ணா

மேலும்
img
நிறுத்திக் கொள்ளுங்கள் என மக்கள் சொல்லுகின்ற வரைக்கும் தொடரும்’-அமைச்சர் காமராஜ் பேச்சு

திருவாரூரில் அதிமுக செயல்வீரர்கள்

மேலும்
img
சர்ச்சை கேக் வெட்டி சக்ஸஸ் பார்ட்டி கொண்டாடிய சர்கார்

படத்தில் இலவசமாக வழங்கப்பட்ட மிக்ஸி,

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img