செவ்வாய் 18, செப்டம்பர் 2018  
img
img

குண்டு அழகிகளுக்கான அழகுராணி போட்டி!
ஞாயிறு 28 மே 2017 12:42:56

img

மெக்னம் இந்த வருடமும் குண்டு அழகிகளுக்கான அழகு ராணி போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. 18 வயதுக்கும் மேற்பட்ட, குறைந்தபட்சம் 80 கிலோ எடை உள்ள அனைத்து பெண்களும் இந்த போட்டியில் பங்கு பெறலாம். உடல் பருமண் ஒரு பெண்ணுக்கு அவளது கனவை அடைவதற்கு தடை இல்லை. அப்படி இருக்கையில் அவர்கள் அழகு ராணியாகவும் உலா வரலாம் என்பதற்கான ஒரு எடுத்துக்காட்டு இந்த போட்டி. இந்த போட்டியில் 3 மாநில அளவு தேர்வு சுற்று நடைபெறும். ஒவ்வொரு தேர்வு சுற்றிலும் நால்வர் தேர்வாகி இறுதி சுற்றில் போட்டியிடுவர். தேர்வு சுற்றுகள் சிலாங்கூர், பினாங்கு மற்றும் மலாக்காவில் நடைபெறும். மேடை நாகரிகம், தன்னம்பிக்கை, பார்வையாளர்களின் ஆரவாரம், உடையலங்கா ரம், மேடை படைப்பு போன்ற வற்றை அடிப்படையாகக் கொண்டு புள்ளிகள் வழங்கப்படும். முதல் நிலை, இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை வெற்றியாளர்கள் முறையே வெ. 5,000, வெ. 3,000, வெ. 2,000 பரிசுப்பணம், வெற்றிக்கோப்பை, அணிதோள் பட்டிகையும், இதர பரிசுகளையும் வெல்லும் வாய்ப்பு உள்ளது. மேலும் இறுதி சுற்று தேர்வாளர்கள் ’Most Talented Award', 'Most Photogenic Award’ மற்றும் ’Best Personality Award’ பட்டங் களை வென்று, வெ.500 ரொக்கமும், வெற்றிக்கோப்பையும் பெறும் வாய்ப்பு உள்ளது. இன்றே பதிந்துக்கொள்ள 012-711 8701 (Code Entertainment) அல்லது 03-9101 5857 (Ms. Rainie) என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். மேல் விவரங் களுக்கு www.megaultimate.com.my அகப்பக்கம் அல்லது www.facebook.com/megaultimate பேஸ்புக் பக்கத்தை வலம் வரவும்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img