செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

ரஜினியுடன் தலைவர்கள், நடிகர்கள் சந்திப்பு தொடங்கியது
சனி 27 மே 2017 15:50:56

img

சென்னை அரசியல் தலைவராக அவதாரம் எடுக்கப் போகும் ரஜினியைச் சந்தித்துப் பேசவும், ஆலோசனை கூறவும் தமிழக அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் ரஜி னியைச் சந்திக்க ஆரம்பித்துள்ளனர். இன்று மட்டும் தமிழருவி மணியன், நடிகர் ஆனந்த ராஜ் ஆகிய இருவரும் ரஜினி வீட்டுக்கு வந்து பார்த்து பேசி விட்டுச் சென்றனர். நடிகர் ஆனந்த ராஜ் புதுச்சேரிக்காரர். அதிமுக சார்பில் புதுவையில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர். ஆனாலும் ஜெயலலிதாவின் அபிமானம் பெற்றவராகவும், முக்கிய பேச்சாளராகவும் இருந்தவர், ஜெ மறைவுக்குப் பிறகு அதிமுகவிலிருந்து ஒதுங்கியே உள்ளார். இப்போது அரசியலுக்கு வரும் ரஜினியுடன் கரம் கோர்க்க ஆர்வம் காட்டி வருகிறார். சந்திப்பு முடிந்து வெளியில் வந்தவரிடம் பேசியபோது, "அண்ணன் ரஜினிக்கு என் மீது எப்போதும் தனி அன்பு உண்டு. அந்த அன்பின் அடிப்படையில் சந்திக்க வந்தேன்," என்று கூறிவிட்டுக் கிளம்பினார். தமாகா யுவராஜ் இன்று ரஜினியைச் சந்தித்த இன்னொரு அரசியல் பிரமுகர் யுவராஜ். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அணித் தலைவரான யுவராஜ் ரஜினியைச் சந்தித்தது இன்னும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கட்சித் தலைவர் ஜிகே வாசனின் அனுமதியுடனே அவர் ரஜினியைச் சந்தித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img