டமாஸ்கஸ்: சிரியா நாட்டில் அரசுப் படைகளுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஐ.எஸ். தீவிரவாதிகளின் உறவினர்கள் வசிக்கும் இடங்கள் மீது அமெரிக்க விமானப் படை இன்று நடத்திய தாக்குதலில் 33 குழந்தைகள் உள்பட 80 பேர் கொல்லப்பட்டனர்.சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் நாட்டின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் வைத்து நிர்வகித்து வருகின்றனர். இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். இந்த குழுக்களையும் வேட்டையாட அமெ ரிக்க விமானப் படையின் துணையுடன் அந்நாட்டு முப்படைகளும் தீவிரமாக போரிட்டு வருகின்றன.இந்நிலையில், சிரியாவின் மயாடின் நகரில் உள்ள அரசு நகராட்சி கட்டிடத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் உறவினர்கள் பலர் தஞ்சம் அடைந்து தங்கியுள்ளனர். இந்த கட்டிடத்தின் மீது அமெரிக்க விமா னப்படை மற்றும் சிரியா விமானங்கள் இன்று அதிகாலை குண்டுகளை வீசி ஆவேச தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 33 குழந்தைகள் உள்பட 80-க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக சிரியாவில் உள்நாட்டுப் போர் நிலவரங்களை கண்காணித்து வரும் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல்
மேலும்பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் சர்கோதா
மேலும்இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வடகிழக்கு
மேலும்பாகிஸ்தானில் பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், வணிக வளாகங்கள்
மேலும்விண்கல் விஞ்ஞானிகளின் கவனத்தை ஈர்த்தது.
மேலும்