வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

வீடுகளைக் காப்பாற்ற மக்கள் போராட்டம்.
வெள்ளி 26 மே 2017 12:49:27

img

கோலாலம்பூர் காலங்காலமாய் வாழ்ந்து வந்த வீடுகளை காப்பாற்றுவதற்கு மக்கள் போராட்டத்தில் குதித்ததால் ஜிஞ்சாங் செலாத்தான் தம்பாஹானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜிஞ்சாங் செலத்தான் லோட் 9714ல் பத்துகேவ்ஸ் உட்பட பல பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் வீடுகளை கட்டி பல காலங்களாக வாழ்ந்து வருகின்றனர். இவ்விடத்திற்கு விரைவில் நில உரிமை பத்திரங்கள் வழங்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் மக்கள் அப்பகுதியில் வீடுகளை கட்டி வாழ்ந்து வரு கின்றனர். வீட்டு நில வரியையும் அப்பகுதி மக்கள் செலுத்தியுள்ளனர். இவ்வேளையில் அவ்வீடுகள் அமைந்திருக்கும் நிலம் மேம்பாட்டு நிறுவனத்திடம் விற்கப்பட்டது. ஆகையால் வீடுகளை உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று கோலாலம்பூர் மாநகர் மன்றம் பல முறை நோட்டீஸ்களை வழங் கியுள்ளது. ஆகக் கடைசியாக வழங்கிய நோட்டீசின் அடிப்படையில் இப்பகுதி மக்கள் மே 18ஆம் தேதிக்குள் வீடுகளை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் வீடுகள் அனைத்தும் உடைக்கப்படும் என கோலாலம்பூர் மாநகர் மன்றம் உத்தரவிட்டது.வீடுகளை காலி செய்ய வேண்டும் என்றால் எங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வந்தனர். மக்களின் போராட்டங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கோலாலம்பூர் மாநகர் மன்றமும், மேம்பாட்டு நிறுவனங்களும் அப்பகுதி மக்களுக்கான இழப் பீடுகளை வழங்க முன்வந்தனர். இழப்பீடுகளை பொதுமக்கள் ஏற்றுக் கொள்ளாத பட்சத்தில் திட்டமிட்டப்படி வீடுகள் உடைக்கப்படும். மேம்பாட்டு பணி கள் தொடரும் என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் கடந்த ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அமைச்சரின் அறிவிப்பை தொடர்ந்து கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகள் நேற்று ஜிஞ்சாங் செலத்தான் தம்பஹானில் உள்ள வீடுகளை உடைக்க வந்தனர். அப்பகுதியில் காலியாக உள்ள வீடுகள், அந்நிய நாட்டினர் தங்கியிருக்கும் வீடுகள், பட்டறைகள் ஆகியவற்றை உடைக்க அதிகாரிகள் முயற் சிகளை மேற்கொண்டனர்.எங்களுக்கு உரிய இழப்பீடுகளை வழங்கி விட்டு மொத்தமாக எல்லா வீடுகளையும் உடைத்துக் கொள்ளுங்கள் என்று மக்கள் போராட்டம் நடத்தினர். வீடுகளை உடைப்பதற்கான கனரக இயந்திரங்களை உள்ளே விடாமல் மக்கள் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தினர்.பேச்சு வார்த்தைகள் ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் அதிகாரிகள் வீடுகளை உடைத்தனர். வீடுகள் காலியாக இருந்ததால் உடைக்கும் போது எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட வில்லை. பொருட்கள் இருந்த வீடுகளை உடைக்கக் கூடாது என்று அப்பகுதி மக்கள் போராடினர்.அதிகாரிகளின் பணிகளுக்கு மக்கள் இடையூராக இருந் ததால் போலீஸ் அதிகாரிகளுடன், கலகத் தடுப்பு போலீஸ் அதிகாரிகள் குவிக்கப்பட்டனர்.இதனால் ஜிஞ்சாங் செலத்தான் தம்பஹான் வீடமைப்பு பகுதி யில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img