புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

தாய் இறந்தது தெரியாமல் பாலுக்காக தவித்த பச்சிளம் குழந்தை
வியாழன் 25 மே 2017 13:52:34

img

போபால்: ஒன்றரை வயது குழந்தை ஒன்று, ரயில் தண்டவாளம் அருகே இறந்த கிடந்த தனது தாயிடம், அது தெரியாமல் பால் குடிக்க முயற்சித்த படம் வேகமாக பரவி வருகிறது. விபத்து: இந்தியா,மத்திய பிரதேசம், தலைநகர் போபால் அருகேயுள்ள தாமோ என்ற நகரில் ரயில் தண்டவாளம் அருகே பெண் ஒருவர் அடிபட்டு இறந்த நிலையில் கிடந்தார். அவர் அருகில் இருந்த அவரது ஒன்றரை வயது குழந்தை பிஸ்கட்டை கொறித்துக் கொண்டிருந்தது. இருப்பினும் தனது தாய் இறந்தது தெரியாத அக்குழுந்தை, அழுதவாறே தாயாரை எழுப்ப முயற்சி செய்ததுடன், அவரிடம் பால் குடிக்கவும் முயற்சி செய்தது. இதனை அங்கிருந்த சிலர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டடனர். இதனிடையே, அந்த பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து அல்லது அடிபட்டு இறந்திருக்கலாம். அவரது தலையில் காயம் இருந்தது. தான் அடிபட்ட நிலையிலும் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். அடிபட்ட பின் சிறிது நேரம் நினைவில் இருந்த அந்த பெண், மகனுக்கு பால் கொடுக்க முயற்சி செய்திருக்கலாம் எனவும் போலீசார் கூறியுள்ளனர். போலீசார், இறந்த பெண்ணின் உடலை எடுத்து சென்ற போது, அக்குழுந்தை கதறியழுததை பார்த்து அங்கிருந்தவர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். தற்போது, குழந்தைகள் காப்பகத்தில் போலீசார் குழந்தையை ஒப்படைத்தனர். பெண் ணின் உறவினர்கள் யாரும் உள்ளனரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெண்ணின் உடல் அருகே கிடைத்த பர்ஸ் மட்டும் போலீ சாருக்கு ஆதாரமாக கிடைத்துள்ளது. இந்த சம்பவத்தில், மற்றொரு செய்தி பரவி வருகிறது. அதில் இறந்த பெண்ணுடன் குழந்தையை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, அங் கிருந்தவர்கள் குழந்தையை அனுமதிக்க மறுத்தனர். ரூ.10 கட்டணம் செலுத்தினால் மட்டுமே குழந்தையை அனுமதிக்க முடியும் என நிர்வாகம் கூறி யுள்ளதாகவும், ஊழியர் ஒருவர் அந்த பணத்தை செலுத்தியதாகவும் அந்த செய்தி பரவுகிறது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
அமெரிக்காவில் ப்ளோரன்ஸ் புயலால் வெள்ளம்

இந்நிலையில், பல இடங்களில் ஆறுகளில் வெள்ளம்

மேலும்
img
கடந்த 7 ஆண்டுகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேற்றம்: ஆய்வில் தகவல்

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று குடியேறும்

மேலும்
img
நடப்பாண்டின் சக்தி வாய்ந்த மங்குட் புயல்

பிலிப்பைன்ஸில் கரையைக் கடந்த மங்குட் புயல் தற்போது சீனாவின்

மேலும்
img
சீனா மீது கூடுதல் வரி... அமெரிக்காவின் பொருளாதார போர்

சுமார் ரூ.14 லட்சம் கோடி மதிப்பிலான சீனப்பொருட்களுக்கு

மேலும்
img
எதற்காக 200 கோடி டாலர்களை தந்தார் அமேசான் நிறுவனர் 'ஜெஃப் பிஸோஸ்'...?

ஒரு குழந்தை தனது ஆரம்பக்கால பள்ளிபடிப்பை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img