செவ்வாய் 20, நவம்பர் 2018  
img
img

ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்து! உயிர் தப்பிய முதல்வர்!
வியாழன் 25 மே 2017 13:14:56

img

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் பயணம்செய்த ஹெலிகாப்டர் தரையில் மோதி விபத்துக்குள்ளானதில், முதல்வர் பட்நாவிஸ் உள்பட ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் காயம் ஏதுமின்றி உயிர் தப்பினர். மகாராஷ்டிரா மாநிலம் லத்தூர் நகரில், முதல்வர் சென்ற ஹெலிகாப்டர் இன்று மதியம் தரையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்தப் பயணத்தில், மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நாவிஸுடன் ஐந்துபேர் பயணித்ததாகக் கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய அனைவரும் காயங்களின்றி உயி பிழைத்துள்ளனர். இதுகுறித்த தகவல்களை உடனடியாகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிந்து, தேவையில்லாத குழப்பங்களைத் தவிர்த்தார், முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ். தன் ட்விட்டர் பதிவில், ‘நாங்கள் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி உள்ளது. நானும் என்னுடன் பயணித்தவர்களும் பாதுகாப்பாக உள்ளோம். வருந்தப்பட வேண்டாம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். விபத்து நடந்த உடனேயே பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
img
கஜா புயலுக்கு இதுவரை 33 பேர் பலி - முதல்வர்

1,216 கோழிகள், 140 வெள்ளாடுகள், 30 மான்கள்

மேலும்
img
தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் - கனிமொழி எம்பி 

தமிழகத்தில் புயலால் பல மாவட்டங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img