ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

யார் இந்த சந்திரா சாமி? ராஜீவ்காந்தி கொலையில் என்ன சம்மந்தம்..?
வியாழன் 25 மே 2017 13:12:26

img

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் முக்கியப்புள்ளியாக கருதப்பட்ட பிரபல சாமியார் சந்திரா சாமி உடல்நலக்குறைவால் கடந்த 23-ம் தேதி காலமானார். சி.பி.ஐ.விசாரணையிலும், ஜெயின் கமிஷனிலும் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் இவரையே முக்கிய புள்ளியாக அடையாளப்படுத்தப்பட்டனர். எவ்வளவு தான் விசாரணை வந்தாலும், ராஜீவ் காந்தியின் கொலைவழக்கு விடைதெரியாத பல மர்மங்களோடு இன்னமும் இழுத்துக் கொண்டிருக்கிறது. இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் அதன் மர்மங்கள் முழுவதும் வெளிவராது என்பதுதான், அந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து கவனித்தவர்கள் ஒருமித்த குரலில் சொல்லும் அதிர்ச்சித் தகவல். ராஜீவ் கொலை சர்ச்சைகள் ராஜீவ் காந்தி உடல் ராஜீவ் கொல்லப்படுவதற்கு முன்பே பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராஃபத், அன்றைய இந்தியப் பிரதமர் சந்திரசேகரிடம் ''ராஜீவ் காந்தியின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது'' என்று எச்சரித்தார். இது வழக்கு விசாரணையில் சி.பி.ஐ உறுதிப்படுத்திய தகவல். 1991-ம் ஆண்டு ராஜீவ் படுகொலையான பின், அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான், ''ராஜீவ் கொலைவழக்கில், புலிகளைத் தவிர உலகநாடுகளின் சதியும் இருக்கிறது'' என்று பகிரங்கமாக அறிவித்தார். இதையெல்லாம் ஒரே நேர்கோட்டில், கொண்டுவந்து தீவிரமாக விசாரித்தால், இந்திய அரசியல் கட்சித் தலைவர்களின் பெயர்களும், அவர்களுக்குப் பின்னே உள்ள வெளிநாடுகளின் சதிவேலைகளும் அம்பலமாகும் என்பது ஜெயின் கமிஷனில் சென்று சாட்சி சொன்ன திருச்சி வேலுச்சாமியின் வாக்குமூலம். மேலும் அவர், நிச்சயமாக வெளிநாடுகளின் பின்னணி இல்லாமலும், இந்திய அரசியல் தலைவர்களின் சதிசெயல்கள் இல்லாமலும் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் குறிப்பிட்டு அதற்கான ஆதாரங்களையும் ஜெயின் கமிஷனில் சமர்பித்தார். சோனியா காந்தியை நேரில் சந்தித்தும் அந்த தகவல்களை அவர் அளித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் கூற்றுப்படி, இந்த வழக்கின் முக்கியப் புள்ளியாகக் கருதப்பட்டவர்தான், நேமி சந்த் ஜெயின் என்கிற சந்திரா சாமி. சந்திரா சாமி சர்ச்சைகள் இந்தியாவின் புரியாத புதிர்களில் ஒருவர் சந்திராசாமி. அவர் அரசியல் பேரங்கள், ஆயுத பேரங்கள் நடத்தி வந்ததாக பரவலாக குற்றம் சாட்டப்பட்டது. சந்திரா சாமி, முன்னாள் பிரதமர் நரசிம்மராவுக்கு மிக நெருக்கமானவர். நரசிம்மராவுக்கு மட்டுமல்லாமல், வெளிநாட்டு வி.ஐ.பி-கள் பலருக்கு ஜோதிட ஆலோசகராகவும் இருந்தவர். அந்த அடிப்படையில் அவருக்கும் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதற்கும் சந்திரா சாமிக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. ஆனால், அது குறித்து சி.பி.ஐ எப்போதும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் சந்திரா சாமியை குற்றம் சாட்டுபவர்கள், "ராஜீவ் காந்தியை கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்ட 'பெல்ட் பாம்' இவரின் மூலம்தான் கொண்டு வரப்பட்டது. மேலும், அந்த பெல்ட் பாம்க்கு சிறப்பு பூஜைகள் செய்தது முதல் சிவராசனை நேபாளம் வழியாக தப்பிக்க வைப்பதற்கு நடந்த பிளான்கள் வரை அனைத்துமே இவரின் ஏற்பாடுகள்தான்" என்று இப்போதும் பல ஆதாரங்களை வைத்து அடித்துச் சொல்கின்றனர். ஜெயின் கமிஷனிலும் இந்த விபரங்கள் பதிவாகி உள்ளன எனபது குறிப்பிடத்தக்கது. 'ராஜீவ் கொலை... தூக்குக் கயிற்றில் நிஜம்' என்றப் புத்தகத்திலும் இதை எல்லாம் கேள்வியை எழுப்பியிருந்தார். அதோடு மட்டுமல்லாமல், ராஜீவ் கொலைவழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்த சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரும், ''இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியே சந்திரா சாமிதான்'' என்று கூறியுள்ளனர். இந்தத் தகவல் அன்றையப் பத்திரிகைகளில் செய்திகள் வெளிவந்தன." ராஜீவ் காந்தி ராஜீவ் காந்தி கொலைவழக்கினை விசாரித்துவந்த ஜெயின் கமிஷனின் விசாரணையின்போது, ''ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டதும் சந்திராசாமி துள்ளிக்குதித்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். மேலும், 'நரசிம்மராவை பிரதமராக்கியேத் தீர்வேன்' என சந்தோஷக் கூத்தாடினார்'' என்று பப்லு ஶ்ரீவத்சவா என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இப்படி ஜெயின் கமிஷன் விசாரணையில் பல்வேறு முக்கியத் தகவல்கள் சந்திரா சாமியைப் பற்றி பதிவாகி உள்ளன. ஆனாலும், இந்தத் தகவல்கள் எல்லாமே 1998-ம் ஆண்டில் 'காணாமல் போய்விட்டதாகச் சொல்லப்பட்டது. ''ராஜீவ் காந்தி படுகொலை விசாரணையில், சந்திரா சாமி, சுப்பிரமணியன் சுவாமியையும் விசாரிக்க வேண்டும்'' என்று ஜெயின் கமிஷன் அறிவித்தது. ஆனால், ஏனோ அது நடக்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில், இன்னும் விடை தெரியாத, விடை தேடாத கேள்விகள் நிறைய இருக்கின்றன. விடுதலைப் புலிகள் ராஜீவ்காந்தியை கொன்றிருக்கலாம். ஆனால், அதன் காரணமும், செயல் திட்டமும் அவர்களிடம் மட்டுமல்ல... வேறு பல தேசங்களில் விரவிக் கிடக்கலாம். அது பற்றி எல்லாம் தெரிந்தவராக கூறப்பட்ட சந்திரா சாமியும் தற்போது இறந்துவிட்டார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img