ஞாயிறு 18, நவம்பர் 2018  
img
img

மாணவர்களின் பகடிவதைக்குள்ளான மாணவி
புதன் 24 மே 2017 16:47:31

img

கிள்ளான் பள்ளியில் பயிலும் சக மாணவர்களின் பகடிவதைக்கு ஆளான ஆறாம் ஆண்டு மாணவி ஒருவர் பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்தார். அவ ரின் உடல்நிலை மோசமான நிலையில் உள்ளதால் மருத்துவர்கள் 48 மணிநேரம் கெடு கொடுத்துள்ளனர். கிள்ளான், ஸ்ரீ அண்டலாஸ் தேசியப் பள்ளியில் ஆறாம் ஆண்டில் பயிலும் மாணவி (வயது 12) சக மாணவர்களால் சில நாட்களாக பகடிவதைக்கு ஆளாகியுள்ளார். தம்மோடு பயிலும் மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பேசிக் கொள்வதைக் நிறுத்திக்கொண்டதால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள் ளார் என நேற்று மாலை கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் டிங் விளக்கமளித்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளியின் மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த அம்மாணவியை தீவிர கண்காணிப்புப் பிரிவில் சேர்த்து துல்லியமான சிகிச்சை வழங் கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட டாக்டர் டிங், அம்மாணவிக்கு கழுத்துப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இருதயத் துடிப்பும் அதிகரித்து வரு வதுடன் மார்புப் பகுதியில் தொடர்ச்சியான ரத்தம் கசிவு ஏற்பட்டுள்ளதால் வெளியாகிக் கொண்டிருப்பதால் அடுத்த 48 மணி நேரத்திற்கு எதுவும் உறுதி யாகக் கூற முடியாது எனவும் தெரிவித்தார். அச்சந்திப்பின்போது கழுத்து நிபுணர், நரம்பியல் நிபுணர், மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் லீலா ஆகியோர் உடனிருந்து விளக்கமளித்தனர். மாணவர்கள் பெற்றோர்களிடையே ஒரு நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். மாணவர்கள் கொண்டு வரும் பிரச்சினையை பெற் றோரும் ஆசிரியர்களும் அக்கறையோடு செவிமடுத்தால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு காணலாம் என கருத்துரைத்த டத்தோ ஆர்.எஸ்.மணியம், மாணவியின் மருத்துவப் பராமரிப்பு தொடர்ந்து கண்காணிக்கப்படும் என பெற்றோரிடத்தில் கூறினார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img