வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

அறிவியல்துறையில் திமியாங் ரெஞ்சோங் தோட்டத்தமிழ்ப்பள்ளி சாதனை
புதன் 24 மே 2017 14:09:31

img

பாகோ அறிவியல் ஆற்றல் எட்டாத கனியாக ஒரு காலத்தில் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கு இருந்து வந்த வேளையில் இன்று நிலைமை மாறி அறிவியல் தமிழ்ப் பள்ளி மாணவர்களுக்கே சொந்தம் என்பதுபோல் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இன்று பல அரிய சாதனைகளை புரிந்து வருகின்றனர். அவ்வகையில் குறைந்த மாணவர்களைக் கொண்ட பாகோ திமியாங் ரெஞ்சோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ஜொகூர் மாநில இளம் ஆய் வாளர்களின் அறிவியல் விழாவின் ஏ பிரிவில் தங்களின் கண்டுபிடிப்பை அறிமுகப்படுத்தி முதல்நிலையில் வந்ததுடன் அடுத்த ஜூன் மாதம் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் தலைநகரில் நடைபெறும் தேசிய நிலையிலான இளம் ஆய்வாளர்கள் அறிவியல் விழா போட்டியில் பங்கு கொள்ளும் வாய்ப்பை பிரகாசப் படுத்திக் கொண்டுள்ளனர். போட்டியில் பள்ளி மாணவர் களான ஜி.தாகேஸ்வரராஜ், ஜி.தேவதர்ஷிணி, சி.மதுமிதா மற்றும் வி.ரவியாகாஷ் ஆகியோர் 'பொருண்மையும் வேகமும்' எனும் கருவில் பொருண்மைக்கும் வேகத்திற்கும் இடையே உள்ள தொடர்பை ஆராய்ந்து அதனை சிறப்பாக செய்து காட்டியதன் வழி ஏ பிரிவு வெற்றி யாளர்களாக வாகை சூடினர். இதனிடையே அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் பள்ளியில் நடந்த போட்டியில் பங்கு கொண்ட மாணவர்களுக்கும் அவர்களுக்கு கைகொடு த்த ஆசிரியர்களுக்கும் பாராட்டுக்கள் குவிந்தன.பள்ளி மாணவர்களின் சாதனை பள்ளிக்கும், பள்ளி குடும்பத்தின ருக்கும் பெருமை சேர்த்துள்ளதாக பள்ளி தலைமையாசிரியை த.லோகாம்பாள் குறிப்பிட் டார்.இந்த வெற்றி பள்ளி மாணவர் களுக்கு உத்வேகத்தை தந் துள்ளது. மாணவர்களின் அறி வியல் ஆற்றல் மற்ற மாணவர்களையும் ஊக்குவிக்க வழி ஏற்படுத்தித் தந்துள்ளதாக குறிப்பிட்ட த.லோகாம்பாள் பள்ளி ஆசிரியர்களுக்கும் உற்சாகத்தைத் தந்துள்ளதாக குறிப்பிட்டார். பெற்றோர்களும் மாணவர்களின் வெற்றியில் பங்கு கொண்டு பரவசமடைந்தனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img