வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

மலிண்டோ ஏர் பாத்தேக் ஏர் ஆக பெயர் மாற்றம்.
புதன் 24 மே 2017 13:35:46

img

சிப்பாங், நான்கு வயது நிரம்பிய மலிண்டோ ஏர் விமான நிறுவனம் பாத்தேக் ஏர் என்ற அதன் புதிய பெயர் மாற்றத்துடன் உலகின் முதலாவது போயிங் 737 மேக்ஸ்8 என்ற விமானத்தை தனது சேவையில் ஈடுபடுத்தியுள்ளதன் வழி வான்போக்குவரத்துச் சேவையில் புதிய முத்திரையையும் சாதனையையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று முன்தினம் காலை இங்கு கே.எல்.ஐ.ஏவில் மலிண்டோ ஏர் நிறுவனத்திற்குச் சொந்தமான உலகின் முதலாவது போயிங் 737 மேக்ஸ்8 ரக புதிய விமானத்தின் சிங்கப்பூருக்கான முதல் வெள்ளோட்ட துவக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய அதன் தலைமை செயல்முறை அதிகாரி சந்திரன் ராமமூர்த்தி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வான் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்ட மலிண்டோ ஏர் நிறு வனத்தின் மைல் கல்லாக இந்தப் புதிய விமானத்தின் சேவை அமைந்துள்ளது. பல்வேறு புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய போயிங் 737 மேக்ஸ்8 விமானத்தின் சிங்கப் பூருக்கான முதல் சேவை துவங்கி யுள்ளதுடன் இவ்வாண்டு இறு திக்குள் தருவிக்கப்படவுள்ள மேலும் மூன்று போயிங் 737 மேக்ஸ்8 புதிய விமானங்களின் மூலமாக வட இந்தியா, பாகிஸ் தான், வங்காளதேசம் போன்ற நாடுகளுக்கான தனது சேவையை விரிவாக்கம் செய்யவிருப்பதாக அவர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளாக மலிண்டோ ஏர் என்றழைக்கப் படும் தங்களின் விமான நிறு வனத்தின் பெயரை இவ்வாண்டு இறு திக்குள் பாத்தேக் ஏர் என பெயர் மாற்றம் செய்யவிருப்பதாக தெரிவித்த அவர் அதன் தொடக்கமாக இன்று பாத்தேக் ஏர் என்ற பெயரில் சிங்கப்பூருக் கான தனது முதல் சேவையை தொடங்கியுள்ளதாக அவர் கூறினார். பன்னிரெண்டு விமானங்களைக் கொண்டு பதினாறு நாடுகளை உள்ளடக்கியுள்ள நாற்பத்தைந்து இலக்குகளுக்கு மலிண்டோ ஏர் தனது வான் போக்கு வரத்து விமானச் சேவையை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார். 180 பயணிகள் பயணிப்பதற்கான வசதியினைக் கொண்ட இப்புதிய போயிங் 737 MAX 8 விமானத்தின் வழி நேற்று காலை 10.30 மணியளவில் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து பிரமுகர்கள், பத்திரிகையா ளர்களுடன் தனது முதல் பயணத்தை சிங்கப்பூருக்கு மேற்கொண்டது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img