வெள்ளி 22, மார்ச் 2019  
img
img

மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற உள்ள ஹோம்மேட் மெலோடிஸ் இசை ஆல்பம்
செவ்வாய் 23 மே 2017 19:04:21

img

கோலாலம்பூர் மலேசிய இசை வரலாற்றில் புதிய பரிணாமமாக ஆரஞ்சு ஃபாக்ஸ் ரெக்காட்ஸால் வெளியிடப்பட உள்ள ஹோம்மேட் மெலோடிஸ் இசை ஆல்பம் மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பெற வைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இசையமைப்பாளர் ஜெய் தெரிவித்தார். இந்த ஹோம்மேட் மெலோடிஸ் இசை ஆல்பத்தில் ஒடிசியில் இசையமைப்பாளர் ஜெய் மற்றும் குரலிசைக் கலைஞர் பிரீத்தா பிரசாத் ஆகியோரிடம் நவீன இசை கற்று வரும் 66 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் உள்ள 19 பாடல்களை மாணவர்களே பல குழுக்களாக அமைத்துக்கொண்டு பாடல் வரிகளைச் சொந்தமாகவே எழுதி இசையமைத்து அவர்களே பாடியும் உள்ளனர் என்பதும் இந்திய இசை பயிற்சிப் பள்ளியில் இத்தகைய முயற்சியை மேற்கொள்வது இதுவே முதல் முறை என்பதும் இதில் சிறப்பு அம்சமாகும். கடந்த 8 மாதங்களாக இங்கு இசைப் பயிற்சியை மேற்கொண்டு வரும் மாணவர்களுக்குப் பாடல்களை எழுதுவது, இசையமைப்பது, பாடுவது தொடர்பான நடவடிக்கைகள் வழங்கப்படும். இதில் மாணவர்கள் தயாரிக்கும் பாடல்கள் காலப் போக்கில் கிடப்பிலேயே இருந்து விடுகின்றன. இந்த நிலை மாற வேண்டியும் மாணவர்களுக்குத் தூண்டுதலை வழங்க வேண்டியும் அவர்களின் பாடல்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து ஆல்பமாக வெளியிடவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என ஜெய் குறிப்பிட்டார். இந்த ஆல்பம் வரும் மே 27ஆம் தேதி சனிக்கிழமை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிஜே லைப் ஆர்ட்ஸ் மையத்தில் பிற்பகல் 3 மணியிலிருந்து மாலை 6 மணி வரையில் நடைபெற உள்ளது. நுழைவு இலவசம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு புது கலைஞர்களாகிய மாணவர்களின் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். ஏனென்றால், இந்த இசை ஆல்பம் மாணவர்களின் படைப்பாக்கத்தில் மலரும் முதல் பாடல் தொகுப்பாகும். இன்றைய காலக் கட்டத்தில் இசை ஆல்பம் வெளியிடப்படுவது மிகவும் அபூர்வமாகி விட்டது. அந்தக் குறையை நிறைவு செய்யும் வகையிலும் இந்த ஆல்பம் பொதுமக்களின் முன்னிலையில் வெளியீடு செய்யப்படுகிறது. இசை ஆல்பத்தை நிகழ்வன்று பொதுமக்கள் வாங்கிக் கொள்ளலாம். இதனிடையே, அதிக இசையமைப்பாளர்கள் இணைந்து ஓர் ஆல்பத்தை வெளியிடும் பிரிவில் மலேசிய சாதனை புத்தகத்தில் இம்முயற்சியை இடம்பெறுவதற்கான பணி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் மேலும் 46 அபாயகர கழிவுப் பொருள் குவிப்பிடங்கள்.

அமைச்சர் அதிர்ச்சி.

மேலும்
img
நியுசிலாந்து தாக்குதல் விவகாரம்: மலேசியாவிலும் உயர் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும்.

அந்தப் பயங்கரவாதத் தாக்குதலில் 50 பேர்

மேலும்
img
மென்பான வரியைத் தவிர இவ்வாண்டிற்கு புதிய வரி ஒன்றுமில்லை

அந்த மென்பான வரிமுறை அரசாங்கத்தின் சுகாதார நோக்கங்களுக்கு

மேலும்
img
பாசிர் கூடாங்கில் தூய்னைக் கேடு. 9 சந்தேக நபர்கள் கைது.

நேற்று முன்தினம் மேற்கொண்ட சிறப்புச் சோதனை வழி

மேலும்
img
மலேசியர்களை மணம் புரியும் வெளிநாட்டவரின் தற்காலிக வேலை அனுமதி ரத்து. 

இந்நாட்டில் திருமணம் புரிய அனுமதியில்லை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img