ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

புற்றுநோயால் உயிர்போகும் நிலையில் இருந்த காதலனை மணந்த காதலி
செவ்வாய் 23 மே 2017 17:54:52

img

லண்டன்: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காதலனை மருத்துவமனையிலேயே காதலி திருமணம் செய்துகொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் அரங் கேறியுள்ளது. இங்கிலாந்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ரே கெர்ஷா என்பவருக்கும் ட்ரேசிக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திடீரென ரே கெர்ஷாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கெர்ஷாவை பரிசோதித்த மருத்து வர்கள் அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறினர். மேலும் புற்றுநோய் முற்றிய நிலையில் இருந்ததால், கெர்ஷா இன்னும் சில நாட்கள் மட் டுமே உயிர் வாழ்வார் எனவும் மருத்துவர்கள் கூறினர். இதனால் ரே கெர்ஷா மற்றும் ட்ரேசி குடும்பத்தினர் கடும் சோகத்தில் மூழ்கினர். திருமணம் நிச்சயிக்கப்பட்டவுனேயே ரே கெர்ஷாயும், ட்ரேசியும் ஒரு வரை ஒருவர் ஆழமாக காதலிக்கத் தொடங்கினர். காதலர்களாக பல இடங்களில் சுற்றித்திரிந்த இந்த ஜோடிகளுக்கு புற்றுநோய் குறித்த தகவல் பேரதிர்ச் சியாக இருந்தது. இருப்பினும் மணமகள் ட்ரேசி மனத் தளராமல் ஒரு ஆச்சரியத்தக்க முடிவை எடுத்தார். அது, ஏற்கனவே நிச்சயிக்கப்பட்டது போல கெர் ஷாவை திருமணம் செய்து கொள்வது. இந்த முடிவு ட்ரேசியின் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி அளித்தாலும் அதை வரவேற்றனர். இதனிடையே கெர்ஷாவினால் மருத்துவமனையிலிருந்து வெளியே வர முடியாது என்பதால், மருத்துவமனையிலேயே இருவருக்கும் திருமணம் நடத் தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் வெறும் 24 மணி நேரத்தில் செய்யப்பட்டன. கெர்ஷாவின் நிலை குறித்து அறிந்த பல சமூக ஆர்வலர்கள், இந்த திரு மணத்திற்கான ஏற்பாடுகளையும், பரிசுப் பொருட்களையும் அன்பளிப்பாக அளித்தனர். இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிர் வாழப்போவது தெரிந் தாலும், இந்த திருமணம் கெர்ஷாவுக்கு மன நிம்மதியை அளிக்கும் என மணமகள் ட்ரேசி தெரிவித்துள்ளார். பல ஆண்டுகள் காதலித்தவர்களை கழட்டி விட்டு செல்லும் காதலர்களுக்கு மத்தியில் புற்றுநோய் இருப்பது தெரிந்தும் கெர்ஷாவை கரம் பிடித்த ட்ரேசியின் காதல் மெய்சிலிர்க்க வைக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

பின்செல்

உலகச் செய்திகள்

img
சக்திவாய்ந்த புதிய ஆயுதத்தை சோதித்த வடகொரியா

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களில்

மேலும்
img
அமெரிக்காவில் சிறுமி பலாத்காரம் இந்தியருக்கு வாழ்நாள் சிறை 

எப்.பி.ஐ. ஏஜெண்ட் தன்னை ஒரு சிறுமி

மேலும்
img
பாகிஸ்தானில் கனமழை 30 பேர் பலி

இந்த சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில்

மேலும்
img
பெருநாட்டின் முன்னாள் அதிபர்  தற்கொலை 

ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img