செவ்வாய் 18, செப்டம்பர் 2018  
img
img

ரஜினி சம்பாதிக்கட்டும்; நாங்க நாட்டை ஆள்கிறோம்!
செவ்வாய் 23 மே 2017 17:37:57

img

'ரஜினிகாந்த், நடித்து சம்பாதித்துவிட்டுச் செல்லட்டும்; நாட்டை ஆள எங்களுக்கே உரிமை உள்ளது' என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். ரசிகர்கள் சந்திப்பில், ரஜினி பேசிய அரசியல் கருத்துகள்தான் ஹாட் நியூஸ். தமிழக அரசியல் சூழ்நிலை, அமைப்பு சரியில்லை என்றார். மேலும், ஸ்டாலின், அன்புமணி ராமதாஸ், சீமான் ஆகியோரைப் பாராட்டினார். ரஜினியின் இந்தப் பேச்சுக்கு, ஆதரவும் எதிர்ப்பும் தெரிவிக்கப் பட்டுவருகிறது. இந்த நிலையில், பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,342ஆம் ஆண்டு சதயவிழாவை முன்னிட்டு, திருச்சி ஒத்தக்கடைப் பகுதியில் உள்ள அவரின் சிலைக்கு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வந்தவங்க எல்லாம் இங்க நாட்டை ஆள முடியாது. நடிக்க வந்தா, நடிச்சி சம்பாதிச்சிட்டுப் போங்க. அதை விட்டுட்டு ஆளணும்னு நினைக்காதீங்க. இந்த நாட்டை எங்களுக்கு ஆளத் தெரியும். ஏற்கெனவே நடிக்க வந்தவங்கள ஆளவிட்டுட்டோம். அதே தவற்றை மீண்டும் செய்யத் தயாராக இல்லை" என்றார். இது, ஜனநாயக நாடு இல்லையா?’ எனப் பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, "இந்த நாட்டைப் பற்றி என்ன தெரியும், எங்க இனத்தின் வரலாறு, பெருமை என்ன தெரியும் உங்களுக்கு? காவிரிப் பிரச்னையில் தமிழ்நாடே போராடியபோது, எங்க போய்த் தூங்கினீங்க? இப்போ நான் பச்சைத் தமிழன் என வசனம் பேசி ஏமாற்ற முடியாது. எங்க ஊரில் இருந்து மகாராஷ்டிராவில் பல நூறு வருடமாக எம் மக்கள் வாழ்கிறார்கள். அவங்க, பச்சை மகாராஷ்டிரர் எனச் சொல்ல முடியுமா? எங்களுக்கு, தமிழ்நாட்டை ஆளத் தெரியும். நீங்க உங்க வேலையைப் பாருங்கள்" என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
எச்.ராஜாவுக்காக வளையும் சட்டம்.. முட்டுக் கொடுக்கும் அமைச்சர்கள்..!”

எச்.ராஜா உள்பட 8 பேரையும் எப்.ஐ.ஆரில்

மேலும்
img
சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐஏஎஸ் காலமானார்.

முன்னாள் பிரதமர்கள் இந்தியா காந்தி, ராஜீவ் காந்தியின்

மேலும்
img
விழுப்புரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் - கனிமொழி பங்கேற்பு

தமிழகம் முழுவதும் இன்று மாவட்ட தலைநகரங்களில்

மேலும்
img
எச்.ராஜா, எஸ்.வி.சேகரை கைது செய்ய தேவையில்லை - மாஃபா பாண்டியராஜன்

விமானத்தில் கோஷம் எழுப்பியதால் மாணவி சோபியா

மேலும்
img
உண்மையை சொல்ல எச்.ராஜாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும்: தமிழிசை சவுந்தரராஜன்

தமிழகத்தில் பாஜக நாகரிக அரசியலை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img