புதன் 24, ஏப்ரல் 2019  
img
img

வாழ வந்தீர்களா? எங்களை ஆள வந்தீர்களா?
செவ்வாய் 23 மே 2017 12:54:59

img

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பல அரசியல் கருத்துகளை வெளியிட்டு தமிழக அரசியல் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக் கிறார். அதிலும் நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களை பக்கத்தில் சேர்க்க மாட்டேன் என்ற அவரது கடுமை யான வாதம் தமிழக அத்தனை அரசியல்வாதிகளையும் மறைமுகமாகத் தாக்கியதாக பார்க்கப்படுகிறது. நாட்டில் ஜனநாயகம் கெட்டுப்போய் இருக்கிறது. ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று ரசிகர்கள் சந் திப்பில் அதிரடி அறைகூவலை ரஜினி விடுத்தமை ரஜினியின் அரசியல் ஆசையை திரைபோட்டுக் காட்டியுள்ள அதேவேளை இதுவரை காலமும் அவர் தருணம் பார்த்துக் காத்திருந்துள்ளார் என அவருக்கெதிரான கருத்துகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில் சென்னை கதீட்ரல் சாலையில் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் நேற்று ஈடு பட்டனர். அந்த அமைப்பின் தலைவர் வீரலட்சுமியின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது என முழக்கங்கள் எழுப் பப்பட்டு, அவரது உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வீர லட்சுமி உள்ளிட்ட 30 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்திருந்தனர். நீ நடிக்க வந்தியா இல்லை எங்களை அடக்கி ஆள வந்தியா எனவும், தமிழர்களை வந் தவர் போனவர் யார் வேண்டுமானாலும் ஆண்டுவிட்டுப் போவீர்களா, எங்களை ஆள நீ ஒரு தமிழனா, நாங்கள் என்ன இழிச்சவாயர்களா என தாறுமா றான கடுமையான வார்த்தைகளால் ஆர்ப்பாட்டக்காரர் திட்டியவாறு ரஜினியின் உருவப் பொம்மையை கால்களால் உதைத்தனர். கைது செய்யப்பட்ட தமிழர் முன்னேற்றப் படையைச் சேர்ந்த கி.வீரலெட்சுமி தேனாம்பேட்டை காந்திமதி திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த போது, அவரிடம், "ஏன் இந்த திடீர் முற்றுகை?" என்ற ஊடகங்களின் கேள்விக்கு பின் வருமாறு பதில் கூறியுள்ளார்.ரஜினி, தமிழகத்தில் வாழ்ந்துள்ள இந்த 42 ஆண்டுகாலத்தில் தமிழ் மக்களின் என்னென்ன பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துள்ளார்? காவிரி நதி நீர் பிரச்சினையில் துவங்கி, தமிழர் களின் வாழ்வாதாரப் பிரச்சினைவரை அவர் என்ன மாதிரியான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்? தமிழகத்தில், தமிழர்களால் சம்பாதித்த பணத்தை கர்நாடகாவுக்குக் கொண்டுசென்று ஒன்றுக்கு, இரண்டாக தொழிற்சாலைகளை நிறுவி அங்கிருக்கும் கன்னட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்திருக்கிறார். ’தலைவா’ என்று துடிக்கும் தமிழக இளைஞர்கள் ரஜினியின் கண்ணுக்குத் தெரிய வில்லையா? காவிரி நதி நீர் பிரச்சினை தொடர்பாக, கர்நாடகாவில் வாழும் தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டது மட்டுமல்லாமல், பலரது உயிர்களும் பறிக் கப்பட்டன. அப்போது, நடிகர் ரஜினி என்ன செய்து கொண்டிருந்தார்? ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற மாநிலங்களில் இருக்கும் நடிகர் சங்கங்க ளில் ஒரு தமிழன் போட்டிபோட முடியுமா? அல்லது வாக்களிக்க முடியுமா? ஆனால், அந்த மூன்று மாநிலங்களின் நடிகர்களும் இங்கிருக்கும் நடிகர் சங்கங் களில் போட்டி போடுகிறார்கள். தங்களின் ஆளுமையைச் செலுத்துகிறார்கள். இது தமிழ் நடிகர்களுக்கு எதிரானது. இது அவருக்குப் புரிகிறதா? அல்லது புரியாதது போல இருக்கிறாரா? எல்லாவற்றுக்கும் மேலாக, தமிழகத்தைச் சுற்றி இருக்கும் மூன்று மாநிலங்களும், தமிழக மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் நதிகளில் தடுப்பணை கட்டுவது தொடர்பாக, ரஜினிகாந்த் இதுவரை குரல் எழுப்பி இருக்கிறாரா? நூற்றுக்கணக்கான தமிழக விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டபோது, ஆயிரம், ரெண்டாயிரம் ரூபாய் பண உதவிகூட கொடுக்கவில்லையே இவர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில்தான் எங்கள் தந்தையார் பிறந்தார், எங்கள் பூர்வீகமே கிருஷ்ணகிரிதான்’ என்று சொல்லும் இதே ரஜினிகாந்த், அந்த மாவட் டத்தைச் சேர்ந்த தமிழர்கள் பிழைப்பு தேடி ஆந்திராவுக்குச் சென்றபோது. ஆந்திர வனத்துறையால் திட்டமிட்டு படுகொலை செய்யப்படபோது ஒரு கண் டன அறிக்கையைக்கூட பதிவு செய்யவில்லையே? லட்சக்கணக்கான தமிழ் மக்கள், ஈழத்தில் கொத்துக்கொத்தாக சுட்டு வீழ்த்தப்பட்டபோது, வைக்கோல் போருக்குள் ஒளிந்திருந்தாரா ரஜினிகாந்த்? பச்சைத் தமிழன் என்று சொல்லும் இவர், இனவாத சிங்கள அரசுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கலாமே? அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது ’போருக்குத் தயாராகுங்கள்’ என்று சொல்கிறார். உலகிலேயே முதன் முதலாக பிரமாண்ட கடற்படையை கட்டமைத்து உலகம் முழுவதும் போரிட்டு தனது எல்லைகளை விரிவாக்கியது தமிழர் இனம். அப்படிப்பட்ட இன மக்கள் வாழும் இந்த மண்ணுக்குப் பஞ்சம் பிழைக்க வந்த ரஜினிகாந்த், போருக்கு அறைகூவல் விடுக்கிறார்.! தமிழர்களுக்கே போரா?ரஜினிகாந்த் அரசியலுக்கு வரட்டும்; வரவேண்டாம் என்று நாங்கள் சொல்லவில்லை. அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவில் போய் அரசியல் செய் யட்டும். இனி தமிழர் அல்லாதவர் தமிழகத்துக்கு வரலாம்; வாழலாம். ஆனால் அரசியலும், ஆட்சி அதிகாரமும் தமிழர்களுக்கு மட்டும்தான்" என்றார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
இலங்கை குண்டுவெடிப்பு.. சென்னையில் 26ம் தேதி சீமான் போராட்டம்!

இலங்கையில் அடுத்தடுத்து 3 தேவாலயங்கள்,

மேலும்
img
இலங்கை குண்டுவெடிப்பை மறக்காதீர்கள்.. எனக்கு வாக்களியுங்கள்..

வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்கும் முன் பாஜகவின்

மேலும்
img
தோல்வி வரும் என்ற அச்சமே தேர்தலை நடத்த விடாமல் தடுக்கிறது... -ஸ்டாலின்

னநாயகத்தை படுகுழியில் தள்ளும் முயற்சிகளை அதிமுக அரசும், தேர்தல் ஆணையமும்

மேலும்
img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img