வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

சகாயத்துக்கு சல்யூட் அடிக்கும் மார்க்கண்டேய கட்ஜு
திங்கள் 22 மே 2017 18:03:01

img

உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியான மார்க்கண்டேய கட்ஜு, சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர். மேலும் அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த காரணத்தினாலோ என்னவோ, தமிழ்நாட்டு விஷயங்கள் பற்றி தொடர்ந்து தன் கருத்தை பொதுத்தளத்தில் எந்தவித அச்சமும் இன்றி பதிவு செய்து வருகிறார். கடந்த வாரத்தின் ஹாட் டாப்பிக்கான ரஜினி அரசியல் பேச்சி குறித்தும், தன் அதிரடி கருத்தைப் பதிவிட்டார். 'ரஜினிகாந்த் ஏன் முதல்வர் ஆக வேண்டும்? அவர் ஏன் ஜனாதிபதி ஆக வேண்டும்? வேலையில்லாத் திண்டாட்டம், வறுமை, பசி, பட்டினி. இதற்கெல்லாம் ரஜினியிடம் தீர்வு உள்ளதா? ரஜினியிடம் ஒன்றுக்கும் தீர்வு இல்லை என்றுதான் நினைக்கிறேன். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் போன்று ரஜினிகாந்த் மண்டையிலும் ஒன்றும் இல்லை’ என்று எந்தவித அச்சமுமின்றி கட்ஜு தன் கருத்தை இணையம் வாயிலாக வெளிப்படுத்தினார். இந்நிலையில், 'வெல்டன் சகாயம்' என்று, சகாயம் ஐ.ஏ.எஸ்.ஸின் விக்கிபீடியா பக்கத்தை இணைத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார் கட்ஜு. சகாயம் தொடர்ச்சியாக, 'லஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்து' என்ற கொள்கையின் மூலம் தமிழகத்தில் தன் அதிகாரத்துக்கு உட்பட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுகுறித்து, அவரது விக்கிபீடியா பக்கத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இதைப் படித்துவிட்டுத்தான் கட்ஜு இவ்வாறு பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
புருஷன் பொண்டாட்டி போல இருந்தோம்.. என்ன செய்ய... ஜெயக்குமார் கலகல பேச்சு

இன்னைக்கு டைவர்ஸ் வாங்க வேண்டிய அவசியம்

மேலும்
img
குற்றவாளிகளும் காவல்துறையினரும் கைகோர்த்து செயல்படுவதாக சந்தேகம் - உயர்நீதிமன்றம்

மேலும் 2009 முதல் 2014 வரை குற்றப்பத்திரிகை

மேலும்
img
கஜா புயலில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு புஷ்பவனம் குப்புசாமி நிவாரனம்

இக்கிராமத்தை சேர்ந்தவரும் புகழ்பெற்ற

மேலும்
img
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அமமுக வேட்பாளர் அறிவிப்பு

எஸ்.காமராஜ் திருவாரூர் மாவட்டத்தின்,

மேலும்
img
திருவாரூர் தொகுதிக்கு யார் வேட்பாளர்?' - தினகரனின் `அனுதாப' சென்டிமென்ட்

ஆர்.கே.நகர் வெற்றியைத் தொடர்ந்து திருவாரூரிலும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img